ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதும் இரண்டாவது டி20 போட்டி டிரினிடாட் நகரில் உள்ள ப்ரையன் லாரா மைதானத்தில் நடைபெறுகிறது.






இரவு 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த போட்டி தற்போது 2 மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம்தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் உடைமைகள் அதாவது லக்கேஜ் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வருவதற்கு தாமதம் ஆகிய காரணத்தால் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி 2 மணி நேரம் தாமதமாக தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தை பலரும் தற்போது டுவிட்டரில் விமர்சித்து வருகின்றனர்.






முன்னதாக, ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி ஆடிய ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த டி20 போட்டியில் இந்திய அணியின் ரோகித்சர்மாவும், தினேஷ் கார்த்திக்கும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


வெஸ்ட் இண்டீஸ் நாட்டின் ட்ரினிடாட் நகரத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4வது மற்றும் 5வது போட்டியும் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அதாவது, இரு அணிகளும் மோதும் 4வது மற்றும் 5வது டி20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற உள்ளது. 6-ந் தேதி மற்றும் 7-ந் தேதி நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கான விசா இதுவரை பெறவில்லை. 


போட்டி நடைபெற இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அமெரிக்கா செல்வதற்கான விசாவை இரு நாட்டு வீரர்களும் பெறாதது, தற்போது போட்டி தொடங்கவுள்ள நேரத்தில் லக்கேஜ் வரவில்லை என்று போட்டி தொடங்கும் நேரத்தை மாற்றி வைத்திருப்பது ரசிகர்களின் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண