டிரினிடாட் நகரில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா த்ரில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்திய அணி 200 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, களமிறங்கிய அக்ஷர் படேல் யாரும் எதிர்பாராத ஒரு அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை த்ரில் வெற்றி பெற வைத்தார்.
இந்த போட்டியில் அவர் 35 பந்தில் 3 பவுண்டரி 5 சிக்ஸருடன் 64 ரன்கள் விளாசி இந்தியா தொடரை வெல்ல உறுதுணையாக இருந்தார். இந்த போட்டியில் தனது முதல் சர்வதேச அரைசதத்தை அக்ஷர் படேல் விளாசியதுடன், ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான தோனியின் சாதனையையும் முறியடித்தார்.
அக்ஷர் படேல் நேற்றைய போட்டியில் 7வது வீரராக களமிறங்கி 3 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 64 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்த எம்.எஸ். தோனி, இந்திய அணியின் பெரும்பாலான போட்டிகளில் 7வது வீரராக களமிறங்கியுள்ளார். 2005ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சேசிங்கின்போது 7வது வீரராக சேசிங்கின்போது 3 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.
தோனிக்கு அடுத்தபடியாக, அதே வரிசையில் 2011ம் ஆண்டு இறங்கிய யூசுப் பதான் தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக 3 சிக்ஸர்களை சேசிங்கின்போது விளாசியுள்ளார். அதாவது, சேசிங்கின்போது 7வது வீரராகவோ அல்லது அதற்கும் கீழேயே இறங்கி அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை அக்ஷர் படேல் நேற்று படைத்தார். இதன்மூலம்,தோனியின் 17 ஆண்டுகால சாதனயை அக்ஷர் படேல் நேற்று முறியடித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்