வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 191 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.


வெஸ்ட் இண்டீஸ் பயணம்


இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸூக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்கிற கணக்கில் தவான் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியுள்ளது.


இந்நிலையில், இரு அணிகள் மோதும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 


முதல் டி20 போட்டி


இன்று இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், அஸ்வின், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர்குமார், அக்‌ஷர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல் ஆகிய வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


இந்நிலையில், முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பவுலிங்கை தேர்தெடுத்தது.


தொடர்ந்து தொடக்க ஆட்டக்கார்கள் ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ் களமிறங்கிய நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.


 






ஒருபுறம் மளமளவென்று விக்கெட்டுகள் சரிந்த நிலையில், ரோஹித் நின்று விளையாடி 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.


 






இறுதியாக தினேஷ் கார்த்திக் தன் அதிரடி ஆட்டத்தால் 41 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் எடுத்தது.






இந்நிலையில், 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்து வருகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண