2022 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இந்தியா-ஆஸ்திரேலியாவிற்கு  இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.


இந்திய அணி தரப்பில் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 52 ரன்களும், ஷஃபாலி வர்மா 48 ரன்களும், ஸ்மிரிதி மந்தனா 24 ரன்களும் எடுத்திருந்தனர். 


155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆரம்பத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலியா அணிக்கு அடுத்தடுத்து 5 விக்கெட்கள் சரிய, சிறப்பாக பந்து வீசி ரேணுகா சிங் 4 விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணிக்கு அச்சமாக திகழ்ந்தார். 






ஒரு கட்டத்தில் இந்திய அணி பக்கம் வெற்றிக்கு பலமான காற்று வீசினாலும், ஆஷ்லே கார்ட்னர் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் சிறந்த பார்டனர்ஷிப் அமைத்து இந்திய அணியின் வெற்றியை பறித்தனர். இதையடுத்து 35 பந்துகளில் 52 அடித்து ஆஷ்லே கார்ட்னர் அசத்தி ஆட்டமிழாக்காமல் இருக்க, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154  ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் குரூப் ஏ தொடக்க ஆட்டத்தின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 4 விக்கெட் வீழ்த்தி அச்சுறுத்தலாக இருந்த ரேணுகா சிங் யார் என்பதை பார்ப்போம்.


ரேணுகா சிங் தாக்கூர் :


ரேணுகா தர்மசாலாவில் இருந்து 325 கிமீ தொலைவில் உள்ள ரோஹ்ருவில் உள்ள பர்சா என்ற கிராமத்தை பிறந்தவர். அவர் மூன்று வயதாக இருக்கும்போது தன் தந்தை கெஹர் சிங்கை இழந்தார். பள்ளியில் படிக்கும் போதே ரேணுகா சிங் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டார். இவரின் கிரிக்கெட் திறமையை பார்த்த இவரின் மாமா பூபிந்தர் சிங் தாக்கூர், இளம் வயது ரேணுகாவை தர்மசாலாவுக்கு அனுப்பி ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் அகாடமி சேர்த்தார். 


அப்போது ரேணுகாவுக்கு 15 வயது கூட ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இமாச்சலப் பிரதேச அணிக்காக 2018-19 சீசனில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் சேலஞ்சர் டிராபியில் அவரது தேர்வானார், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்தியா A அணியிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.