ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடன் கிரிக்கெட் ஆடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றி பெற்ற சூழலில், இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு பிறகு இந்திய அணி இலங்கையுடனான தொடரில் ஆட உள்ளது.



IND vs SL T20:  இலங்கை தொடரில் விராட்கோலிக்கு ஓய்வு..? புதிய டெஸ்ட் கேப்டனாகிறாரா ரோகித் சர்மா...?


இந்த தொடருக்கான இந்திய அணியில் விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல, காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் ரவீந்திர ஜடேஜா உடல்தகுதி பெற்றுள்ளதால் அவர் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


கடந்தாண்டு இரண்டாம் பாதி முதல் தனது நெருக்கடிகளை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்து வருகிறார். மேலும், ஐ.பி.எல். கேப்டன் பதவி, டி20 கிரிக்கெட் கேப்டன் பதவி, டெஸ்ட் கேப்டன் பதவிகளை ராஜினாமா செய்தது, ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து அவரை நீக்கியது உள்ளிட்ட விவகாரங்களால் அவரது பேட்டிங் பார்ம் கடந்த சில தொடர்களாகவே தடுமாறி வருகிறது. இதன்காரணமாக, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவருக்கு சிறிது ஓய்வு அளிக்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது.





இதனால், இலங்கையுடனான தொடரில் டி20 போட்டிகளுக்கு மட்டும் விராட்கோலிக்கு ஓய்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வரும் நிலையில், ரோகித்சர்மாவை புதிய கேப்டனாகவும் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. இந்திய அணி இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை அணியுடனான தொடரில் இந்திய நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா மட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.





இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இலங்கை அணியுடனான முதல் டி20 போட்டி வரும் 24-ந் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் லக்னோவிலும், அடுத்த இரு டி20 போட்டிகள் தர்மசாலாவிலும் நடைபெற உள்ளது.  


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண