இந்தியா - இலங்கை:


இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி 3 டி30 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா - இலங்கை அணி நேரடியாக மோதுகின்றன. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபரா வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டிபல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று(ஜூலை 28)தொடங்கியது. 


டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிஷாங்கா மற்றும் குஷல் மெண்டிஸ் களம் இறங்கினார்கள். குசல் மெண்டிஸ் 11 பந்துகள் களத்தில் நின்று 10 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக்கட்டினார். அப்போது குசல் பெரேரா களத்திற்கு வந்தார். நிஷாங்கா  மற்றும் பெரேரா ஜோடி நிதானமாக விளையாடியது.


162 ரன்கள் இலக்கு:


24 பந்துகள் களத்தில் நின்ற நிஷாங்கா 5 பவுண்டரிகள் விளாசி 32 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் கமிந்து மெண்டிஸ் களம் இறங்கினார். அவர் 26 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த குசல் பெரேராவும் ஆட்டமிழந்தார். மொத்தம் 34 பந்துகள் களத்தில் நின்ற அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 53 ரன்கள் குவித்தார்.


அடுத்ததாக களம் இறங்கிய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழக்க 20 ஓவர்கள்  முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலங்கை அணி 161 ரன்கள் எடுத்தது. 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய உள்ளது இந்திய அணி.