இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணியை அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தர்மசாலாவில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இரு அணியின் வீரர்களும் தர்மசாலா சென்றடைந்துள்ளது. 


 


இந்நிலையில் இலங்கை தொடரிலிருந்து காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அவருக்கு பதிலாக மாயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 


 


ஏற்கெனவே காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் இலங்கை டி20 தொடரிலிருந்து விலகியிருந்தனர். அவர்களை தொடர்ந்து தற்போது ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். தற்போது ரஞ்சிக்கோப்பை தொடருக்காக சண்டிகரில் பயோபபுளில் இருந்த மாயங்க் அகர்வால் உடனடியாக இந்திய அணியின் பயோ பபுளிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 






முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இவர் சர்வதேச டி20 போட்டிகளில் 3307 ரன்களை அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மார்டின் கப்டிலை இவர் தாண்டியுள்ளார். இந்தப் பட்டியலில் 3299 ரன்களுடன் கப்டில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து விராட் கோலி 3296 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். 


இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. மூன்றாவது டி20 போட்டி 27ஆம் தேதியும் தர்மசாலவிலும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் மார்ச் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக மார்ச் 12ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண