ஜூன் 23 முதல் தொடங்கும் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய பெண்கள் அணியின் ஒருநாள் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். மிதாலி ராஜ் (இன்று) புதன்கிழமை தனது ஓய்வை அறிவித்ததை அடுத்து பிசிசிஐ இந்த முடிவை வெளியிட்டுள்ளது. ஹர்மன்பிரீத் ஏற்கனவே இந்திய டி20 பெண்கள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவிற்கு வரவிருக்கும் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக அகில இந்திய பெண்கள் தேர்வுக் குழு (இன்று) புதன்கிழமை கூடியது. அப்பொழுது ஏற்கனவே இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜ் இன்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய டி20 அணி:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), எஸ். மேக்னா, தீப்தி சர்மா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட், சிம்ரன் பகதூர், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), பூஜானா வஸ்த்ரகர். சிங், ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ்.

இந்திய ஒருநாள் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), எஸ் மேக்னா, தீப்தி ஷர்மா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட், சிம்ரன் பகதூர், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ரகர், மேக்னா வஸ்த்ரகர். சிங், ரேணுகா சிங், தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹர்லீன் தியோல்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண