ஐசிசி டெஸ்ட் பேட்டிங் மற்றும் பவுலிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி வீரர் விராட் கோலி 10ஆவது இடத்தை பிடித்து கடும் சரிவை சந்தித்துள்ளார். பவுலிங்கில் அஸ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுசாக்னே முதல் இடம் பிடித்துள்ளார். ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரரான இங்கிலாந்தின் ஜோ ரூட் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இரண்டு இடங்கள் சரிந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் கேப்டன் ரோகித் சர்மா 8வது இடத்திலும், ரன் மிஷின் கோலி 10வது இடத்திலும் உள்ளனர்.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (நான்காவது) மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி (ஐந்தாவது) தலா ஒரு இடம் சரிந்தனர்.
ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 901 தரவரிசைப் புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினை விட 51 புள்ளிகள் முன்னேறி 850 புள்ளிகளுடன் இருக்கிறார்.
ஆல்-ரவுண்டர் தரவரிசையில் சக வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அடுத்தபடியாக அஷ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்களில் கோலி கடும் சரிவை சந்தித்துள்ளார். பும்ரா இறங்குமுகத்தில் இருக்கிறார். அஸ்வின் மட்டும் சொல்லிக்கொள்ளும்படி 2வது இடத்தை பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்