இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக இலங்கை அணி இந்தியா வர உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். இலங்கை தொடருக்கான டி20 அணியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றிருந்தார். அதேபோல் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஜஸ்பிரீத் பும்ரா மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். 


 


இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். தீபக் சாஹருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் பந்துவீசும் போது காயம் ஏற்பட்டது. அந்தப் போட்டியில் ஃபில்டிங்கின் போது சூர்யகுமார் யாதவிற்கும் காயம் ஏற்பட்டது. 


 






இதைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் 3-4 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இவர்கள் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளனர். இவர்களுக்கு மாற்று வீரர்களாக யாரும் அறிவிக்கப்படவில்லை. 


 


டி20 தொடருக்கான இந்திய அணி:


 


ரோகித் சர்மா,ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, பும்ரா(துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, சாஹல், பிஷ்னோய், குல்தீப் யாதவ், அவேஷ் கான்


 


இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 24ஆம் தேதி லக்னோவில் நடைபெறுகிறது. இரண்டாவது டி20 போட்டி 26ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி 27ஆம் தேதியும் தர்மசாலவிலும் நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் மார்ச் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக மார்ச் 12ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண