இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு, இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி ஆட உள்ளது.


சூர்யாவிடம் பேட் கேட்ட ரிங்குசிங்:


இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இலங்கையின் பல்லேகேலேவில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் வளரும் அதிரடி நட்சத்திரம் ரிங்குசிங் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் பேட் கேட்ட ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.


அவருக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவும் தனது பேட்டை வழங்கியுள்ளார். சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சரி. எனது பேட்டை எடுத்துக்கொள் என்று பதிவிட்டுள்ளார். அதற்கு உடனடியாக பதில் அளித்துள்ள ரிங்குசிங் பேட்டை எனக்கு கொடுங்கள் அண்ணா என்று பதிவிட்டுள்ளார்.


அன்று விராட்கோலி:


இந்திய அணியின் தொடக்க வீரர்களுக்கு பலரும் போட்டியிட்டு வரும் சூழலில், ஃபினிஷர் ரோலில் தோனிக்கு பிறகு சிறப்பாக செயல்பட்டு வருபவர் ரிங்குசிங், கடந்த 2022ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான சூழலில், கடைசி ஓவரின் முதல் 5 பந்தையும் சிக்ஸருக்கு விளாசி கொல்கத்தாவை வெற்றி பெற வைத்தார். அதுமுதல் ரிங்குசிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியிலும் இடம்பிடித்து அசத்தி வருகிறார்.


கடந்த ஐ.பி.எல். தொடரின்போது கொல்கத்தா – பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் பேட் வழங்குமாறு கேட்டார். அவருக்கு விராட் கோலியும் தனது பேட்டை வழங்கினார். அன்று விராட் கோலியிடம் பேட் வாங்கிய ரிங்குசிங் இன்று சூர்யகுமார் யாதவிடம் பேட் பெற்றுள்ளார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


26 வயதான ரிங்குசில் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடி 55 ரன்களும், 20 டி20 போட்டிகளில் ஆடி 416 ரன்களும் எடுத்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் 45 போட்டிகளில் ஆடி 893 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Paris Olympics 2024: வேறமாறி.. ஒலிம்பிக்கிலும் கலக்க வந்த ஸ்கேட்போர்டிங்!ரசிகர்களை உற்சாகப்படுத்துமா?


மேலும் படிக்க: Paris Olympics 2024: களைகட்டியது பாரீஸ்! நாளை தொடங்குகிறது ஒலிம்பிக் திருவிழா - கோடிக்கணக்கான ரசிகர்கள் உற்சாகம்