ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடன் கிரிக்கெட் ஆடி வருகிறது. இந்த தொடருக்கு பிறகு இந்திய அணி இலங்கை அணியுடன் கிரிக்கெட் தொடர் ஆட உள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இலங்கை அணி இந்தியாவுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.




இந்த நிலையில், பி.சி.சி.ஐ. தற்போது இந்தியா – இலங்கை தொடருக்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. புதிய அட்டவணையின்படி இந்திய அணி இலங்கை அணியுடன் முதலில் டி20 போட்டிகளில் ஆடுகிறது. பின்னர், 2021-23ம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தொடருக்காக இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது.


முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி வரும் 24-ந் தேதி உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் நடைபெற உள்ளது. இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் அமைந்துள்ள மைதானத்தில் 26ந் தேதி நடைபெற உள்ளது. மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியும் தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் 27ந் தேதி நடைபெற உள்ளது.








டி20 தொடருக்கு பிறகு இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் மார்ச் 4-ந் தேதி நடைபெற உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 12-ந் தேதி தொடங்க உள்ளது. பெங்களூரில் நடைபெற உள்ள இந்த டெஸ்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது.  




தென்னாப்பிரிக்க தொடரில் தோல்வியை சந்தித்த பிறகும், நடப்பாண்டிலும்  இந்திய அணி விளையாடும் முதல் உள்நாட்டு டெஸ்ட் தொடர் இதுவாகும். விராட்கோலி ஏற்கனவே தனது டெஸ்ட் கேப்டன்சியை ராஜினாமா செய்ததால், புதிய கேப்டன் யார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இலங்கையுடனான டெஸ்ட் தொடர் வரும் 4-ந் தேதி தொடங்க உள்ளதால், புதிய கேப்டன் யார்? என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: IPL Auction 2022: தொடக்கத்திலேயே தட்டித்தூக்கணும்.. ஆனா வீரர்கள் எப்படி? குஜராத், லக்னோ அணிகளின் ஸ்குவாட் விவரம்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண