இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த, டி-20 தொடரில் இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இளம் இந்திய அணி களம் கண்டு வருகிறது.


சூர்யகுமார் சதம்:


மும்பையில் நடைபெற்ற தொடரின் முதல் டி-போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. புனேவில் நடைபெற்ற இரண்டாவதுவது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், தொடரை வெல்லப் போவது யார் என்பதை உறுதி செய்யும் 3-வது கடைசி டி-20 இன்று நடைபெற்று வருகிறது. 


ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது. 


சூர்யகுமார் 45 பந்துகளில் சதம் அடித்தார். சர்வதேச டி20 அரங்கில் சூர்யகுமார் யாதவின் மூன்றாவது சதம் இதுவாகும். சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார். இதன் போது, ​​அவரது பேட்டில் இருந்து 7 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் விளாசின. சூர்யாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது. சூர்யாவைத் தவிர, ஷுப்மான் கில் 46 ரன்களும், அக்சர் படேல் 9 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 21 ரன்களும் எடுத்தனர்.






229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா, குசல் மெண்டீஸ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் குவித்த நிலையில், 15 பந்துகளில் 23 ரன்கள் குவித்த குசல் மெண்டீஸ் அக்சார் பந்தில் உம்ரான் மாலிக்கிடம் கேட்சானார். 


இலங்கை தோல்வி:


தொடர்ந்து, பதும் நிசங்கா 15 ரன்களுடனும், அவிக்ஷா 1 ரன்களிலும் வெளியேறினார். அடுத்ததாக உள்ள வந்த தனஞ்சயா டி சில்வாவும், அசலங்காவும் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தனர். 14 பந்துகளில் 19 ரன்கள் குவித்த அசலங்காவும், 14 பந்துகளில் 22 ரன்களில் தனஞ்சயாவும் சஹால் பந்தில் கவுந்தனர். 


அடுத்தது இலங்கை அணியின் விக்கெட்கள் விழ, 15.3 பந்துகளில் 8 விக்கெட்களுக்கு 127 ரன்களுடன் தடுமாறியது. தொடர்ந்து, இலங்கை அணியின் நம்பிக்கையாக இருந்த சனகாவும் அர்ஷ்தீப் பந்துவீச்சில் சரிய, தில்ஷான் மதுஷங்கவையும் க்ளீன் போல்டாக்கினார். இதனால் இலங்கை அணி 137 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரையும் 2-1 என்ற கணக்கிலும் வென்றது.