IND vs SL 1st T20: அறிமுக போட்டியில் 4 விக்கெட்கள் எடுத்து அசத்திய மாவி.. இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Continues below advertisement

இந்தியா- இலங்கை எதிரான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், களமிறங்கிய இந்திய 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்தது. 

Continues below advertisement

தீபக் ஹூடா 23 பந்துகளில் 41 ரன்களுடனும், அக்சார் படேல் 20 பந்துகளில் 31 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் கடைசி வரை களத்தில் இருந்தனர். 

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அறிமுக போட்டியில் மாவி அடுத்தடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து உம்ரான் மாலிக், அசலங்காவையும், ஹர்சல் பட்டேல் ராஜபக்சேவையும், குசல் மெண்டீசையும் வெளியேற்றினர். 

இதையடுத்து, 11 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 68 ரன்களில் இலங்கை அணி தடுமாறியது. அதன்பிறகு, தசுன் சனகா மற்றும் ஹசரங்கா இணைந்து இந்திய அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தனர். 

11 பந்துகளில் 21 ரன்கள் குவித்த ஹசரங்கா, சிவம் மாவி பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்சானார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி அதிரடி காட்டிய தசுன் சனகா 37 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் அடித்து 45 ரன்னில் வெளியேற, பின்னால் வந்த மகேஷ் தீக்ஷனாவும் 1 ரன்னில் அவுட்டானார். 

இதையடுத்து இலங்கை அணிக்கு 6 பந்துகளில் 13 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி ஓவர் வீசிய அக்சார் படேல் முதல் பந்தே வொய்ட்டாக வீசி அதிர்ச்சியளிக்க, அடுத்த பந்து 1 ரன்னாக அமைந்தது. 2 பந்து டாட்டாக விழுக, ஸ்ரைக்கில் இருந்த கருணாரத்னே அடுத்த பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டார். 3 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், 4 வது பந்து டாட்டாக விழுந்தது. 5 வது பந்தில் கருணாரத்னே இரண்டு ரன்களுக்கு முயற்சி செய்து, ரஷிதாவை ரன் அவுட்டாகினார். 

கடைசி 1 பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களை இழந்து இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. 

இந்திய அணியில் அதிகபட்சமாக மாவி 4 விக்கெட்களும், உம்ரான் மாலிக் மற்றும் ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola