தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சின் தலைவனாக ஜஸ்பிரித் பும்ரா விளங்குவார் என்று தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


நீண்ட நாட்களுக்கு பிறகு களம் இறங்கும் பும்ரா:


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு மேல் ஆகிறது. முன்னதாக, முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் இறுதிப்போட்டி உட்பட பல டெஸ்ட் தொடர்களை அவர் தவறவிட்டார். அதேநேரம், ஆசியக் கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை 2023 ஆகிய தொடர்களில் விளையாடினார். இச்சூழலில், டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா விளையாட உள்ளார்.


முன்னதாக, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு போட்டிளில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். அப்படி, வெற்றி பெற்றால் மட்டும் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியும். அதேநேரம் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை.


கடந்த முறை தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்றது.


இதனிடையே, இந்த தொடரில் விராட் கோலி,  ரோகித் சர்மா,  ருதுராஜ், ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல், போன்ற வீரர்களும் ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும். அதேநேரம், இந்திய அணியின் பந்து வீச்சளர்கள் அனைவரும் நல்ல பார்மில் இருக்கிறார்கள். 


வேகப்பந்து வீச்சின் தலைவன்:


இந்நிலையில், தான் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சின் தலைவனாக நிச்சம் ஜஸ்பிரித் பும்ரா விளங்குவார் என்று தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து ஏபி டி வில்லியர்ஸ் பேசுகையில்,  “இந்திய அணியின் வேகப்பந்து வீச்சின் தலைவராக நிச்சயம் பும்ரா விளங்குவார். தென்னாப்பிரிக்க வீரர்களை நோக்கி அவர் பந்தின் மூலம் கேள்வி கேட்பார். அவர் பந்து வீசத் தொடங்கினால் அழுத்தம் கொடுப்பதை நிறுத்தவே மாட்டார். அவரிடம் அனைத்து திறமைகளும் இருக்கிறது.


கடந்த முறை இந்திய அணி வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் விளையாடிய போது பும்ரா தான் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார். அவர் எந்த சூழலிலும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். ஸ்டெம்பை நோக்கி பந்தை கொண்டு வருவார். ஒன்று பந்து உள்ளே வரும் இல்லையென்றால் வெளியே செல்லும்.” என்று கூறியுள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், “பும்ரா தென்னாப்பிரிக்க வீரரக்ளை கடும் நெருக்கடிக்கு ஆளாக்குவார். இம்முறை ஒட்டுமொத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் தென்னாப்பிரிக்க அணிக்கு ஆபத்தை கொடுப்பார்கள்” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: IPL 2024 Auction: உலகக் கோப்பையில் அதிரடி... ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு செல்லும் வெளிநாட்டு வீரர்கள்! விவரம் இதோ!


மேலும் படிக்க: Virat kohli: விராட் கோலி உணவகத்தில் வேட்டியில் சென்ற தமிழருக்கு அனுமதி மறுப்பு - வேதனைப்பட்ட இளைஞர்!