தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி வீரர்களின் விவரத்தை பிசிசிஐ இன்று (நவம்பர் 3) வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடர்:


இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் முடிவடைந்த உடனையே, இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான தொடரில் விளையாட உள்ளது.


டி20 தொடரிலிருந்து தொடங்கி ஒருநாள், டெஸ்ட் என அடுத்தடுத்த தொடர்கள் நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை 2024ஐ மனதில் வைத்து, இந்திய அணி அடுத்து விளையாடும் ஒவ்வொரு டி20 போட்டியிலும் சிறந்த அணியை தேர்வு செய்யவேண்டும்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று (நவம்பர் 30) வெளியிட்டுள்ளது. இதில் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு விறுப்ப ஓய்வு அளித்துள்ளது பிசிசிஐ. மேலும், இந்த தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியலையும்  வெளியிட்டுள்ளது.


ஒரு நாள் போட்டிகள் இந்திய அணி வீரர்கள்:


ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். , முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.


டி 20 இந்திய அணி வீரர்கள்:


யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது. சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.


முன்னதாக, தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளின் புள்ளி விவரங்களைப் பார்த்தால், இதுவரை அங்கு 5 டி20 போட்டிகள் நடந்துள்ளன. இந்த ஐந்து போட்டிகளில் இந்தியஅணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்கா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.


இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான கடைசி டி20 சர்வதேசப் போட்டி 30 அக்டோபர் 2022 அன்று ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. அதனால், உலகக் கோப்பை டி20 போட்டிக்கு முன்னோட்டமாக இந்த தொடர் இருக்கும்.


டெஸ்ட் இந்திய அணி வீரர்கள்:


ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், கே.எல். ராகுல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா.


மேலும் படிக்க: IND vs AUS 4th T20: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா... சமன் செய்யுமா ஆஸ்திரேலியா! வெற்றி வாய்ப்பு யாருக்கு?


மேலும் படிக்க: T20 World Cup 2024: டேய் எப்புட்றா... டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற உகாண்டா!