இந்தியா  - தென்னாப்பிரிக்கா:


இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்தியா 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. கடைசியாக அந்த 2 அணிகளும் 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் மோதின. அதில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த ரோஹித் தலைமையிலான இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அந்தப் போட்டிக்கு பின் அதே அணிகள் இந்த தொடரில் மோதுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இம்முறை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இளம் வீரர்களுடன் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. மறுபுறம் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி ரபாடா போன்ற சில முக்கிய வீரர்கள் இல்லாமல் இத்தொடரில் விளையாட உள்ளது. 






இந்த நிலையில் இன்று (நவம்பர் 8) முதல் போட்டி டர்பன் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த வகையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா பேட்டிங்கை தொடங்கியுள்ளனர்.


இந்தியா:


அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.


தென்னாப்பிரிக்கா:


ரியான் ரிக்கெல்டன், ஐடன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், பேட்ரிக் க்ரூகர், மார்கோ ஜான்சன், அண்டில் சிமெலேன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், நகாபயோம்சி பீட்டர்.