தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி  டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அடித்த பந்து பெண்ணின் முகத்தை பதம் பார்த்த நிலையில் அதற்கு மைதானத்திலே சஞ்சு சாம்சன் மன்னிப்பு கோரினார்


தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாசில்  வெற்றி இந்திய அணி முதலில் பேட்டிங்கை  தேர்வு செய்தது. சஞ்சு சாம்சன் மற்றும் அதிரடியாக ஆடி இந்திய அணிக்கு நல்ல துவக்கம் தந்தனர். அபிஷேக் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா அடுத்ததாக களமிறங்கினார் இருவரும்  அதிரடியாக ஆடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 


இதையும் படிங்க: Ind vs SA T20: தீயாய் வந்த திலக்.. சாத்தியெடுத்த சஞ்சு.. இத்தனை சாதனைகளா!


ரசிகையின் முகத்தில் பட்ட பந்து: 


அப்போது போட்டியின் 10வது ஒவரை  டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு விளாசி தனது அரைசதத்தை சாம்சன் பதிவு செய்தார். இரண்டாவது பந்தையும் சாம்சன் மிட் விக்கெட் திசையில் நோக்கி சிக்ஸ் அடித்தார் அப்போது கூட்டத்தில் இருந்த பெணின் முகத்தில் பந்துபட்டது. , பந்து முதலில் பாதுகாவலரைத் தாக்கியது, பின்னர் அங்கிருந்து எகிறி அந்த பெண்ணின் தாடையை பதம் பார்த்தது, அந்த அடி அப்பெண்ணின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிலையொல்  அவளுக்கு உடனடியாக சில ஐஸ் பேக் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை கண்ட சஞ்சு சாம்சன் உடனடியாக  காயமடைந்த பெண்ணிடம் தனது கையை தூக்கி மன்னிப்பு கோரினார். 






ஒரே ஆண்டில் 3வது சதம்:


இதன் பின்னர் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த சஞ்சு சாம்சன் 51 பந்துகளில் தனது மூன்றாவது சதத்தை பதிவி செய்தார். இந்த சாம்சன் அடித்த மூன்றாவது சதம் இதுவாகும். இது மட்டும் இல்லாமல் சர்வதேச டி20 போட்டி வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் சஞ்சு சாம்சன் சொந்தக்காரர் ஆனார். 


இந்த போட்டியை இந்திய அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.இந்த ஆண்டில் இந்திய அணி ஆடிய அனைத்து டி20 தொடர்களையும் இந்திய அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.