தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்று பல்வேறு சாதனைகளையும் முறியடித்துள்ளது. 


4வது டி20 போட்டி:


இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதனாத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாசில்  வெற்றி இந்திய அணி முதலில் பேட்டிங்கை  தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். இரண்டு  பேரும் தங்களின் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்ட தொடங்கினார். அபிஷேக் சர்மா 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சென்ற போட்டியில் சதம் அடித்த திலக் வர்மா அடுத்ததாக களமிறங்கினார். சென்ற போட்டியில் எங்கே விட்டுச்சென்றரோ அங்கே இருந்து தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் திலக் வர்மா. இருவரும் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு வாணவேடிக்கையாக நிகழ்த்தி காட்டினர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 283 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 109 ரன்களுடனும், திலக் வர்மா 120 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 


அடுத்ததாக இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்த தொடரை இந்திய அணி 3-1 என்கிற கணக்கில் வென்று அசத்தியது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை திலக் வர்மா தட்டிச்சென்றார்.


சாம்சன்,திலக் சாதனை:


கடந்த இரண்டு போட்டியில் ட்க் அவுட் ஆன சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார். கடந்த 5 டி20 போட்டிகளில் சாம்சன் அடித்த 3வது சதமாகும். இதன் மூலம் ஒரே ஆண்டில் இந்திய அணிக்காக மூன்று சதங்கள்  அடித்த முதல் இந்திய என்ற வீரர் என்கிற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார்.


மறுப்பக்கம் அதிரடியாக ஆடிய திலக் வர்மாவும் சதமடித்து அசத்தினர். இதன் மூலம் முழு வீரர்கல் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட அணிகளில் ஒரே டி20 போட்டியில் 2 இரண்டு சதங்கள் அடித்த அணி சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன்பு நாடுக்காளுக்கான போட்டியில் சீனா vs ஜப்பான், செக் குடியரசு vs பல்கேரியா ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருந்தது. 


Rohit Sharma: வந்தாச்சு குட்டி ஹிட்-மேன் - ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்தை, குவியும் வாழ்த்து மழை


முறியடிக்கப்பட்ட சாதனைகள்:



  • இந்த போட்டியில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் தனது அதிகப்பட்ச ஸ்கோரையும் இந்திய அணி பதிவு செய்ததது( 283-1). இதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 244 ரன்கள் எடுத்ததே அதே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

  • தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தனது அதிகப்பட்ச டி20 ஸ்கோரை இந்திய அணி பதிவு செய்தது. முந்தையை போட்டியில் 219 ரன்கள் அடித்ததே அதிகப்பட்ச ஸ்கோராக இருந்தது.

  • இந்திய டி20களில் தனது இரண்டாவது அதிகப்பட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்தது. வங்கதேச அணிக்கு எதிராக 297 ரன்கள் அடித்தது அதிகப்பட்ச ஸ்கோராக உள்ளது. 

  • ஒரே ஆண்டில் சர்வதேச டி20களில் 7 சதங்கள் அடித்த ஒரே அணி என்கிற சாதனையை இந்திய படைத்துள்ளது. சஞ்சு சாம்சன்-3, திலக் வர்மா-2, ரோகித் மற்றும் அபிஷேக் சர்ம தலா 1 சதம் அடித்துள்ளனர். 

  • இந்த போட்டியில் இந்தியா அணி மொத்தம்  23  சிக்ஸர்களை அடித்தது. சஞ்சு சாம்சன் (9), அபிஷேக் ஷர்மா (4), திலக் வர்மா (10).இதன் மூலம் முழு உறுப்பினர் அணிகளுக்கிடையில் நடந்த சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும்.