IND Vs SA 4th T20: இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெற உள்ளது.

Continues below advertisement

இந்தியா - தென்னாப்ரிக்கா 4வது டி20:

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை தொடர்ந்து இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் வென்று இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக தர்மசாலாவில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் அசத்தியது. இதையடுத்து இன்று நான்காவது போட்டி நடைபெற உள்ளது. இதில் வென்று தொடரை கைப்பற்ற இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி வாகை சூடி தொடரை வெல்லும் வாய்ப்பை நீட்டிக்க தென்னாப்ரிக்கா அணியும் முனைப்பு காட்டுகிறது.

Continues below advertisement

போட்டியின் நேரலை விவரங்கள்:

தொடரை தீர்மானிக்கக் கூடியது என்பதால் இன்றைய போட்டியின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர். லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

தொடரை வெல்லுமா இந்திய அணி?

இரண்டாவது போட்டியில் 200-க்கும் அதிகமான ரன்களை வாரிக்கொடுத்தாலும், மூன்றவாது போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களது துல்லியமான தாக்குதலால் தென்னாப்ரிக்க வீரர்களை திணறடித்தனர். இதனால், இந்தியாவின் வெற்றி முதல்பாதியிலேயே கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதேஃபார்மை தொடர்ந்தாலே இன்றைய போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடும். ஆனாலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோரது ஃபார்ம் அணியின் பேட்டிங் ஆர்டருக்கு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. கில்லை உலகக் கோப்பைக்கு தயார்படுத்துவதாக கூறி, சஞ்சு சாம்சனிற்கான வாய்ப்பு பறிக்கப்படுவதாக ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், தென்னாப்ரிக்கா அணியிலும் பேட்டிங்கில் உள்ள சில பிரச்னைகளை சரி செய்தால் மட்டுமே இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

லக்னோ மைதானம் எப்படி?

ஏகனா மைதாத்தில் உள்ள ஆடுகளம் இரண்டு வேகத்தில் அமைந்திருக்கலாம், சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய நபர்களாக திகழலாம். அப்படி நடந்தால் தொடரை தீர்மானிக்கக் கூடிய இந்த போட்டியில், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவை சமாளிக்க தென்னாப்பிரிக்க அணி போராடி வேண்டி இருக்கும்.

உத்தேச ப்ளேயிங் லெவன்:

இந்தியா: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (வி.கே.), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

தென்னாப்ரிக்கா: குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம் (கேப்டன்.), டிரிஸ்டன் ஸ்டப்ஸ்/ரீசா ஹென்ட்ரிக்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், டேவிட் மில்லர், டொனோவன் ஃபெரீரா, மார்கோ ஜான்சன், ஜார்ஜ் லிண்டே/கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி/கார்பின் போஸ்ச், ஆட்னீல் பார்ட்ஜே, ஆட்னீல் பார்ட்ஜே.