இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாட உள்ள பார்படாஸில் தற்போது மழை படிப்படியாக குறைந்துள்ளது.
டி20 உலகக் கோப்பை:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது ஐசிசி டி20 உலகக் கோப்பை. இதில், லீக் போட்டிகள் சூப்பர் 8 சுற்று மற்றும் அரையிறுதி போட்டிகள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அதன்படி இன்று (ஜூன் 29) கென்சிங்டன் ஓவல் பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா மற்றும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி நடைபெறும் பார்படாஸ் நகரின் வானிலை தான் ரசிகர்களை அச்சம் மூட்டுகிறது.
வானிலை எப்படி இருக்கிறது?
வெஸ்ட் இண்டீஸ் நாட்டின் தற்போதைய நேரம் காலை 10.30 மணி. இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தான் தொடங்கும். டாஸ் இரவு 7.30 மணிக்கு போடப்படும். சூழல் இப்படி இருக்க நேற்று முதல் அங்கு கனமழை பெய்தது. தற்போது அங்கு மழை படிப்படியாக குறையத் தொடங்யுள்ளது. இதை அந்த நாட்டு வானிலை மையம் உறுதி செய்துள்ளது. ஆனால் போட்டியின் போது மழை குறிக்கிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மழை வந்தால் என்னவாகும்?
ஐசிசி விதிமுறையின் படி போட்டி இரவு 9 மணிக்கு தொடங்க்கப்பட்டால் இரு அணிகளும் இருபது ஓவர்கள் வரை விளையாடும். ஆனால் இதனை தாண்டி போட்டி நடைபெறும் சூழல் உருவானால் 10 ஓவர்களாக குறைக்கப்படும். போட்டி தொடங்குவதற்கு முன் முழுவதும் மழை வந்தால் போட்டி நாளைக்கு மாற்றிவைக்கப்படும்.