இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது  டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது தென்னாப்ரிக்க அணி.

அதனை அடுத்து, ஜனவரி 19-ம் தேதி தொடங்கும் ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன. ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியதால், அகில இந்திய மூத்த தேர்வுக் குழுவால், ஒருநாள் தொடருக்கான கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டார். துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டார். மேலும், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஷிகார் தவான், சாஹல் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

ஒரு நாள் தொடர் விவரம்:

இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் மூன்று ஒரு நாள் போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்க உள்ளது.

ஜனவரி 19 பார்ல் கிரிக்கெட் மைதானம்
ஜனவரி 21 பார்ல் கிரிக்கெட் மைதானம்
ஜனவரி 23 பார்ல் கிரிக்கெட் மைதானம்

அணியின் விவரம்:

கே.எல். ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்),  சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், நவ்தீப் சைனி

அப்டேட்: வாஷிங்கடன் சுந்தருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ், கூடுதல் வீரராக நவ்தீப் சைனி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்

2017-2018 ஆண்டுகளில் தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது. இதுதான் தென்னாப்ரிக்கா மண்ணில் இந்திய அணி வென்ற முதல் ஒரு நாள் தொடராகும். அதனை அடுத்து, கொரோனா பரவல் காரணமாக போட்டிகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்ததை அடுத்து, ஒரு நாள் தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண