இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக தென்னாப்பிரிக்கா அணியின் வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியின் வீரர்கள் டெல்லியில் நேற்று வலைப் பயிற்சியை தொடங்கினர். விராட் கோலி,ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் இந்தத் தொடருக்கு முன்பாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஒரு பாட்காஸ்ட்டில் பேசியுள்ளார். அதில் அவர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, “என்னுடைய விக்கெட் கீப்பிங் நன்றாக முன்னேற்றம் அடைந்துள்ளதா என்பது குறித்து எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் நான் ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய 100 சதவிகிதத்தை கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். என்னுடைய சிறு வயது முதல் நான் ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறேன். என்னுடைய தந்தையை பார்த்து தான் நான் விக்கெட் கீப்பராக உருவாகினேன். அவரும் ஒரு விக்கெட் கீப்பராக இருந்தார். அதன்காரணமாக நானும் அதை தொடர்ந்தேன். 


 






ஒரு விக்கெ கீப்பராக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அப்படி சுறுசுறுப்பாக இருக்கும் பட்சத்தில் அது உங்களுடைய கீப்பிங்கிற்கு மிகவும் உதவும். மேலும் பந்து வருவதை கடைசி வரை பார்க்க வேண்டும். அப்போது தான் நம்மால் சரியாக பிடிக்க முடியும். ஒரு ஆண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாடும் போது உங்களுடைய மனம் சரியாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே உங்களுடைய 100 சதவிகிதத்தை களத்தில் தர முடியும். ஆகவே ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தங்களுடைய மனதை புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்ள தீவிரமாக பாடுபடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 


தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடருக்கு ரிஷப் பண்ட் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் கீப்பராக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார். அவர் தற்போது வரை பேட்டிங்கில் அசத்தி வருகிறார். எனினும் அவருடைய கீப்பிங்கில் இன்னும் ஒரு சில குறைகள் உள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். சமீப காலங்களில் அதை சரி செய்ய ரிஷப் பண்ட் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண