இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணியின் வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் முழுவதற்கும் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கபட மாட்டாது என பிசிசிஐ, சிஎஸ்ஏ கிரிக்கெட் வாரியங்கள் சார்பில் முடிவு எட்டப்பட்டுள்ளது. வீரர்களின் நலனை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், பூட்டிய மைதானத்திற்குள் போட்டிகள் நடக்க உள்ளன.
வழக்கமாக, வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, தொடர் தொடங்குவதற்கு முன்பு ஃபோட்டோஷூட் எடுத்து கொள்வது வழக்கம். அந்த வகையில், இந்திய அணி வீரர்கள் ஃபோட்டோஷூட் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், அணி வீரர்கள் அனைவரும் உற்சாகமாக ’போஸ்’ கொடுக்க, முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆயுத்தமாகி வருகிறது இந்திய அணி.
இதுவரை தென்னாப்ரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிடாத இந்திய அணி, இம்முறை முதல் முறையாக தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கி உள்ளதாக தெரிகிறது. மைதானம் சென்றடைந்த முதல் நாளில் இருந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் வீரர்கள்.
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக ப்ரியாங்க் பஞ்சல், கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (WK), விருத்திமான் சாஹா (WK), ), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.
காத்திருப்பு வீரர்கள்: நவ்தீப் சைனி, சவுரப் குமார், தீபக் சாஹர், அர்ஜன் நாக்வாஸ்வாலா.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்