தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்பு முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி இந்திய வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 197 ரன்களுக்கு சுருண்டது.மூன்றாவது நாளான நேற்று முன்தினம் ஆட்டநேர இறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. 


 நேற்று தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணியில் ஷர்துல் தாகூர்(10) ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர் ராகுலும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்கு பிறகு முதல் பந்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 18 ரன்களில் ஜென்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.




இந்தநிலையில், விராட்கோலியை ஜென்சன் அவுட் செய்ததன் மூலம் ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2018 ம் ஆண்டு விராட் கோலி தென்னாப்பிரிக்கா சென்றிருந்தபோது ஜென்சன் அவருக்கு வலைப்பயிற்சியின்போது பந்து வீசியுள்ளார். அப்பொழுது ஜென்சன் வீசிய பந்துகளை பார்த்து விராட் கோலி வியந்து அவரை தனியாக அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு பாராட்டியுள்ளார். தற்போது, ஜென்சனே இந்த ஆண்டு விராட் கோலி விக்கெட்டை கைப்பற்றியது அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 






என்னதான் கடந்த 2 ஆண்டுகாலமாக விராட் கோலி பார்மில் இல்லை என்றாலும் பல உலக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் இளம் வீரர்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார். ஜென்சனும் தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே விராட் கோலி விக்கெட்டை கைப்பற்றியதன்மூலம் வாழ்நாள் சாதனையாக கருதி இருப்பார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண