தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்பு முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி இந்திய வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 197 ரன்களுக்கு சுருண்டது.மூன்றாவது நாளான நேற்று முன்தினம் ஆட்டநேர இறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. 


 நேற்று தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணியில் ஷர்துல் தாகூர்(10) ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர் ராகுலும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்கு பிறகு முதல் பந்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 18 ரன்களில் ஜென்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.


 






இதன்மூலம் இரண்டு ஆண்டுகள் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் சதம் அடிக்காமல் நிறைவு செய்துள்ளார். அதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சதம் அடிக்காமல் 768 நாட்கள் விராட் கோலி இருந்துள்ளார்.


மேலும், கடந்த இரண்டு இன்னிங்ஸிலும் விராட் கோலி ஆப் சைடுக்கு வெளியே சென்ற பந்தை தேடி அடித்து அவுட் ஆனார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கோலியை கடுமையாக விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். 




நேற்றைய போட்டியில் விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் வர்ணனையில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது, விராட் கோலி அவுட் ஆனதை கண்டு கடுப்பான அவர் கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்தார். அதில், "டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில், எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் இடைவெளிக்கு பிறகு கிடைத்து ஆடுசிறிது நேரம் எடுத்துக் கொண்ட பிறகு தான் ரன் எடுக்க முயற்சிப்பார்கள்.


 






ஆனால், இவ்வளவு அனுபவம் இருந்தும் விராட் கோலி ஆப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற பந்தினை, தேவையில்லாமல் அடிக்கிறார். கடந்த முதல் இன்னிங்ஸிலும் அவர் இதேபோல் தான் அவுட் ஆனார்.ஒரு வேளை வேகமாக ரன்களை குவித்து, டிக்ளேர் செய்ய பிளான் பண்ணிருப்பார் போல. எப்பொழுதும் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலும் டிக்ளேர் செய்யலாம் என எதிர்பார்க்கும் போது இந்திய அணி ஆல் அவுட்டாகி தான் செல்கிறது என்று விமர்சனம் செய்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண