9ஆம் தேதி நடைபெற்ற இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்றது. போட்டி நடந்து கொண்டிருக்கையில், பார்வையாளர்களில் சிலர் சரமாரியாக தாக்கிக்கொண்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஸ்கோர்


முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர் இஷான் கிஷன் 48 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 76 ரன்களை குவித்து அசத்தினார். ருதுராஜ் 23 (15), ஷ்ரேயஸ் ஐயர் 36 (27), ரிஷப் பந்த் 29 (16), ஹார்திக் பாண்டியா 31 (12) ஆகியோரும் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கினார்கள். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 211/4 ரன்களை குவித்து அசத்தியது. இருப்பினும் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் வேன் டெர் டசன் மற்றும் மில்லர் அதிரடி காட்டி இமாலய இலக்கை லெப்ட் ஹேண்டில் வென்று தந்து விட்டனர்.



ரசிகர்கள் அதிருப்தி


ராகுல் விலகிய நிலையில், ரிஷப் பண்ட் கேப்டன்சியில் முதல் போட்டியில் தோல்வியை தழுவ, ஃபீல்டிங்கை முதல் காரணாமாக கூறுகின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். டெல்லி அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் வந்த நிலையில் இந்திய ரசிகர்கள் முதல் போட்டியிலேயே அதிருப்தியை கொடுத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


மைதானத்தில் சண்டை


இந்த போட்டியின் இடையே மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அடித்துக்கொண்ட விஷயம் விடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. இரு தரப்பினர் சரமாரியாக தாக்கிக் கொள்வதை காட்டுகிறது இந்த விடியோ. பெரிய இந்திய தேசிய கொடி ஒன்றை அந்த நபர் வைத்திருந்ததாகவும், அதனால் மற்ற பார்வையாளர்கள் தொந்தரவு அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வாக்குவாதத்தில்தான் பேச்சு கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக்கொண்டுள்ளனர்.






விடியோ வைரல்


இந்த ட்வீட் ஜூன் 10 (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிடப்பட்டதிலிருந்து, 180 க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் 950 லைக்குகளையும் பெற்றுள்ளது. பலர் கமெண்டில், கிரிக்கெட் ஸ்டேடியத்தில் WWE நடக்கிறதா என்று ஒரு கேட்டு வருகின்றனர். இந்த அடிதடியை பார்த்தவர்கள் வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டுள்ளனர் என்பது கமெண்ட் செக்ஷனில் தெரிகிறது.


2வது T20 போட்டி


இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது T20 போட்டி நாளை மாலை 7 மணிக்கு கட்டாக்கில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் கட்டாக்கிற்கு ஏற்கனவே வந்துள்ளனர். முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால், இரண்டாவது போட்டிக்காக இந்திய அணி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.