ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நேற்று நடந்த இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், மீதமுள்ள நான்கு டி20 போட்டிகளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்களை வீழ்த்துவதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் தற்போது ரவிசந்திரன் அஷ்வின் அதிக விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் சாஹல் 2 விக்கெட்டுகள் பின்தங்கி 2 வது இடத்தில் உள்ளார்.
(நேற்று) ஜூன் 9 ம் தேதி நடந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் சாஹல் ஒரு விக்கெட்களை கூட வீழ்த்தவில்லை. மீதமுள்ள நான்கு டி20 போட்டிகள் ஜூன் 19 வரை சாஹல் 2 விக்கெட்களை வீழ்த்தினால் அஸ்வினைத் தாண்டி முதலிடத்திற்குச் செல்ல ஒரு அசாதாரண வாய்ப்பு உள்ளது.
டி20 வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் டுவைன் பிராவோ :
532 போட்டிகளில் 582 விக்கெட்டுகளை வீழ்த்திய முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் டுவைன் பிராவோ ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் முதலிடத்தில் உள்ளார். இந்த வரிசையில் தற்போது பதினெட்டாவது இடத்தில் சாஹல் உள்ளார். சாஹல் 242 போட்டிகளில் 274 விக்கெட்டுகளையும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்காத அஷ்வின் 282 போட்டிகளில் 276 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
டி20களில் இந்திய பந்துவீச்சாளரால் அதிக விக்கெட்டுகள் :
- ஆர் அஸ்வின் - 282 போட்டிகளில் 274
- யுஸ்வேந்திர சாஹல் - 242 போட்டிகளில் 272
- பியூஷ் சாவ்லா - 256 போட்டிகளில் 270
- அமித் மிஸ்ரா - 236 போட்டிகளில் 262
- ஜஸ்பிரித் பும்ரா - 207 போட்டிகளில் 253
சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் யுஸ்வேந்திர சாஹல்
யுஸ்வேந்திர சாஹல் தற்போது டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்