டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில் வருகின்ற ஜூன் 12 ம் தேதி (நாளை) இந்திய அணி 2 வது டி20 போட்டியில் கட்டாக் பாராபதி ஸ்டேடியத்தில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. 


முதல் டி20 போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் எட்ட ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக இருந்தார். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணி 200 ரன்கள் கடக்க போராடினார். இருப்பினும் இந்திய அணி அந்த போட்டியில் தோல்வியை தழுவியது. 


கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது தொடரிலேயே கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அந்த தொடரில் ஹர்திக் பாண்டியா 15 இன்னிங்ஸில் 487 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக மீண்டும் இவர் இந்திய அணிக்கு திரும்பினார்.






இந்தநிலையில், பிசிசிஐ ஹர்திக் பாண்டியா குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் உணர்ச்சிவசமாக பேசியிருந்தார். அதில், "மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு சுய கருத்திற்கு எதிராக நானே வெற்றி பெற்றேன். ஐபிஎல் வெல்வது அல்லது பிளேஆஃப்களுக்கு தகுதி பெறுவது கூட எனக்கு ஒரு பெரிய விஷயமாக இருந்தது, ஏனென்றால் நிறைய பேர் எங்களை சந்தேகிக்கிறார்கள். நாங்கள் தொடங்குவதற்கு முன்பே நிறைய பேர் எங்களைப் பார்த்து முகம் சுளித்தனர். பலர் பல கேள்விகளை எழுப்பினர். நான் மீண்டும் வருவதற்கு முன்பே என்னைப் பற்றி நிறைய விஷயங்கள் கூறப்பட்டது" என்றார். 


மேலும், "நான் மீண்டு வந்தது அவர்களுக்கு பதில் அளிப்பதற்காக அல்ல. நான் ஓய்வில் இருந்த ஆறு மாதங்களில் நான் என்ன செய்தேன் என்பது யாருக்கும் தெரியாது. பயிற்சியை உறுதி செய்வதற்காக நான் காலை 5 மணிக்கு எழுந்துவிட்டேன். நான்காவது மாதம் இரவு 9:30 மணிக்கு தூங்கினேன். ஐபிஎல் போட்டிக்கு முன் நான் நடத்திய போர் அது. நான் என் வாழ்க்கையில் எப்போதும் கடினமாக உழைத்தேன், அது எப்போதும் நான் விரும்பிய பலனைத் தந்தது" என்று தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண