இந்திய அணி மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற விராட்கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் பேட்டிங்கை தொடங்கிய கே.எல்.ராகுலும்- மயங்க் அகர்வாலும் ஆட்டத்தை தொடங்கினர்.


தொடக்கம் முதலே கே.எல்.ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மயங்க் அகர்வால் அதிரடியாக ஆடினார். அரை சதம் கடந்த மயங்க் அகர்வால் சிறிது நேரத்தில் அவர் லுங்கி நிகிடி வீசிய ஓவரில் 123 பந்தில் 9 பவுண்டரிகளுடன் 60 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 


அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா தான் சந்தித்த முதல் பந்திலே ஆட்டமிழந்தார். இதையடுத்து, கேப்டன் கோலி களமிறங்கினார். அவரும் கே.எல்.ராகுலும் இணைந்து மிகவும் நிதானமாக ஆடினர். இருவரும் ஏதுவான பந்துகளில் மட்டும் ரன்களை சேர்த்தனர். அவ்வப்போது பந்துகளை பவுண்டரிகளுக்கும் விரட்டினார்.


அணியின் ஸ்கோர் 199 ரன்களை எட்டியபோது கேப்டன் விராட்கோலி 94 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்களை எடுத்தபோது லுங்கி நிகிடி பந்தில் மல்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து முன்னாள் துணை கேப்டன் ரஹானே களமிறங்கி முதல் பந்தே பௌண்டரிக்கு அடித்து சிறப்பான தொடக்கம் தந்தார். 


 






இந்தநிலையில், தொடர்ந்து பார்ம் அவுட்டில் திணறி வரும் ரஹானே இந்த போட்டியில் எப்படியாவது ரன் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் களமிறங்கினர். இந்த டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் பந்து வீச வரும்போது, ரஹானே பந்தை பார்! பந்தை பார்! என்று தனக்கு தானே சொல்லிக்கொள்ளும் வீடியோ தற்போது ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடும் லெவன் அணியில்  ரஹானே இடம்பிடித்தது பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நீண்ட காலமாக பேட்டிங்கில் சொதப்பிவரும் அவர், நேற்றைய ஆட்டத்திற்கு முன்பு 2021 இல் இந்தியாவுக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19.57 என்ற மோசமான சராசரியுடன் 411 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 






முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களுடன் களத்தில் உள்ளது. கே.எல்.ராகுல் 248 பந்தில் 122 ரன்களை குவித்துள்ளார். அதில் 16 பவுண்டரிகளும், 1 சிக்ஸர்களும் அடங்கும். ரஹானே 81 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 40 ரன்களுடன் களத்தில் உள்ளார்.  தென்னாப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி  நிகிடி 17 ஓவர்களில்  4 ஓவர்களை மெய்டனாக்கி வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண