இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கே செல்லும் இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட இருக்கிறது.
இந்தநிலையில், இந்த மூன்று வடிவிலான தென்னாப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு தலைமை தாங்கிய கேப்டன் டெம்பா பவுமாவை ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்கவில்லை. இருப்பினும், டெஸ்ட் வடிவத்திலும் அவருக்கு இடம் கிடைத்து, கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணியை இங்கே பார்க்கலாம்.
அப்போ யார் கேப்டன்..?
சமீபத்தில் முடிவடைந்த ODI உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியை டெம்பா பவுமா வழிநடத்தினார். மேலும் அவரது அணி முழு உலகக் கோப்பையிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டது, ஆனால், டெம்பா பவுமா தனிப்பட்ட முறையில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. இதன் காரணமாகவே, உலகக் கோப்பைக்குப் பிறகு நடைபெறும் முதல் ஒருநாள் தொடரில் பவுமாவை ஒருநாள் அணியில் இருந்து தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் நீக்கியதாக கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு எதிரான தென்னாப்பிரிக்கா ஒருநாள் அணி:
எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், நந்த்ரே பெர்கர், டோனி டி ஜோர்ஜி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், மிஹாலலி ம்பொங்வானா, டேவிட் மில்லர், வியான் முல்டர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, லீஸென் வான்னியா, ரஸ்ஸி வான்னியா, ரஸ்ஸி வான்சியா
எய்டன் மார்க்ரம் இந்தியாவுக்கு எதிரான இருபது20 மற்றும் ஒருநாள் சர்வதேச (ODI) அணிகளுக்கு கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை முடிந்த பிறகு, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலாம டிசம்பர் 10-14 வரை டர்பன், க்கெபர்ஹா (முன்னர் போர்ட் எலிசபெத்) மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் மூன்று டி20 போட்டிகளுடன் தொடங்குகிறது.
இந்தியாவிற்கு எதிரான தென்னாப்பிரிக்கா டி20 அணி:
ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னியேல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நான்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டொனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹராஜ், டேவிட் மில்லர், லுங்கி ஷிப்ரா, ஸ்டெப்ரா, ஸ்டெப்ராஸ்டன் மற்றும் லிசாட் வில்லியம்ஸ்.
அதன் பின்னர் இரு அணிகளும் டிசம்பர் 17-21 க்கு இடையில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், முதல் டெஸ்ட் டிசம்பர் 26 ஆம் தேதி பிரிட்டோரியாவிலும், இரண்டாவது டெஸ்ட் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் ஜனவரி 3 ஆம் தேதியும் தொடங்குகிறது.
இந்தியாவிற்கு எதிரான தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், நான்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, டீன் எல்கர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், லுங்கி என்கிடி, கீகன் பீட்டர்சன், ட்ரைய்ல் செயின்ட் ரபாடா, ககிஸ்டன் ரபடா, வெர்ரின்னே.