சூர்யகுமார் யாதவ் தலைமையிலானன இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டியில் இந்திய அணியும், 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும், 3வது டி20 போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.
தொடரை வெல்லுமா இந்தியா?
இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. ஜோகன்ஸ்பர்க்கில் இன்று இரவு நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் களமிறங்குகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றும்.
இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங் பலமாக இருந்தாலும் நிலையான பேட்டிங் திறன் வீரர்களிடம் வெளிப்படாதது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. முதல் போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன் அடுத்த இரண்டு போட்டிகளில் டக் அவுட்டானார். இன்றைய போட்டியில் அவர் நன்றாக விளையாட வேண்டியது அவசியம் ஆகும்.
கம்பேக் தருவார்களா சொதப்பல் வீரர்கள்?
அபிஷேக் சர்மா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். கேப்டன் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். ஃபினிஷிங் ரோலுக்காக அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ரிங்குசிங் இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவர் சிறப்பாக ஆட வேண்டியது கட்டாயம் ஆகும். கடந்த போட்டியில் கடைசி கட்டத்தில் அசத்திய ராமன்தீப்சிங் இன்றைய போட்டியில் கலக்குவாரா? என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். கடந்த போட்டியில் சதம் விளாசிய திலக் வர்மா இந்த போட்டியிலும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.
சமன் செய்யுமா தென்னாப்பிரிக்கா?
தென்னாப்பிரிக்கா அணியும் இந்திய அணியை விட பலமான அணியாகவே உள்ளது. அந்த அணியில் அனுபவமிக்க கேப்டன் மார்க்ரம், மில்லர், கிளாசென், ஹென்டரிக்ஸ் உள்ளனர். இவர்களை விரைவில் அவுட்டாக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இளம் வீரர் ஸ்டப்ஸ் அதிரடியில் அசத்தக்கூடியவர். இவர்கள் சிறப்பாக ஆடினால் தென்னாப்பிரிக்க அணி எளிதாக 200 ரன்களை கடக்கும். கடைசி கட்டத்தில் பேட்டிங்கில் மிரட்டும் ஜான்சென் தென்னாப்பிரிக்காவிற்கு பலம் ஆகும்.
அந்த அணியின் ஜான்சென், கோட்ஸி, சிமெலன், சிபம்லா சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும். இந்திய அணியிலும் பந்துவீச்சிற்கு பலமாக அர்ஷ்தீப்சிங், பாண்ட்யா, அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் உள்ளனர். இந்திய அணி சிறப்பாக பந்துவீச வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்கா தொடரை சமன் செய்யும் என்பதால் அவர்கள் வெற்றி பெற முழு முனைப்புடன் போராடுவார்கள். இதனால், இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதி