தென்னாப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கேப்டன் விராட் கோலி அரை சதம் கடந்து கேப்டன் இன்னிங்ஸை ஆடியிருக்கிறார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு 28வது அரை சதம் ஆகும்.


இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன. இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்கியது. 


டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். ஓப்பனிங் பேட்டர்கள் கே.எல் ராகுல், மயாங்க் அகர்வால் பெரிதாக சோபிக்கவில்லை. அதனை அடுத்து கோலி களமிறங்கினார். நிதானமாக ஆடிய கேப்டன், 158 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தி இருக்கிறார். இதில், 7 பவுண்டரிகள், 1 சிக்சர் அடங்கும்.






சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், கோலி மெதுவாக அரை சதம் கடந்த இரண்டாவது இன்னிங்ஸ் இது என்ற ரெக்கார்டு பதிவாகியுள்ளது. முன்னதாக, 2012-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 171 பந்துகளில் அரை சதம் கடந்திருப்பார். இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி மெதுவாக அரை சதம் கடந்த இன்னிங்ஸ். 


கோலியின் டெஸ்ட் ரெக்கார்டுகள்:











தென்னாப்ரிக்கா மண்ணில் தென்னாப்ரிக்காவுக்கு எதிராகவும், வெவ்வேறு இடங்களில் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக விளையாடிய போட்டிகளிலும், அதிக முறை அரை சதம் கடந்த இந்திய கேப்டன் என்ற ரெக்கார்டை தன்வசப்படுத்தி இருக்கிறார் கோலி.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண