இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கான மூன்றாவது மற்றும் கடைசி  ஒருநாள் போட்டி இன்று அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் பீல்டிங்கை தேர்வு செய்தார். 


அதன் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ஜனனிமான் மாலன் களமிறங்கினர். குவின்டன் டி காக் 6 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தில் ஆவேஷ் கானிடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து மற்றொரு தொடக்க வீரரான மாலன், முகமது சிராஜ் வீசிய 8 வது ஓவரில் 15 ரன்கள் எடுத்து ஆவேஷ் கானிடன் கேட்சானார். 


நிதான ஆட்டத்தை வெளிபடுத்த நினைத்த மார்க்கரம் 19 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்தார். தற்போது தென்னாப்பிரிக்கா அணி 44 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. 


அடுத்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களுடன் வெளியேற, ஹென்ரிச் கிளாசென் மட்டும் ஓரளவு தாக்குபிடித்து விளையாடி 34 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். பின் வரிசையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டேவிட் மில்லர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 ரன்களில் க்ளீன் போல்ட் செய்தார் வாஷிங்டன் சுந்தர். 






தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி வீர்ர்கள் சொதப்பிய நிலையில், இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். 100 ரன்களாவது தென்னாப்பிரிக்கா அணி அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 27.1 ஓவர்களில் 99 ரன்களுக்குள் தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டை இழந்தது. 










இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும், சுந்தர், சிராஜ் மற்றும் அகமது தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.