தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஏற்கனவே நடந்த இரண்டு ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள காரணத்தால், தொடரை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டி என்பதால், இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கேசவ் மகராஜ் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தென்னாப்பிரிக்காவை டேவிட் மில்லர் தலைமை தாங்குகிறார்.
டாஸ் வென்ற பிறகு இந்திய கேப்டன் ஷிகர் தவான் பேசுகையில், “நாங்கள் முதலில் பந்து வீசுவோம். விக்கெட்டில் ஈரப்பதம் இருப்பதாக நான் உணர்கிறேன். அதை நாங்கள் ஆராய விரும்புகிறோம். அழுத்தத்தின் கீழ் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடினர். நாங்கள் கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்குகிறோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டேவிட் மில்லர் பேசுகையில், “கேப்டனாக இருப்பது எப்போதுமே ஒரு பாக்கியம். முதலில் பந்துவீசியிருப்போம். எங்களிடம் மூன்று மாற்றங்கள் உள்ளன” என்று தெரிவித்தார்.
இந்தியா அணி:
ஷிகர் தவான்(கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அவேஷ் கான்
தென்னாப்பிரிக்கா அணி:
குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), ஜான்மேன் மலான், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர்(கேப்டன்), மார்கோ ஜான்சன், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே