IND vs SA 3rd ODI LIVE: வெற்றி பெறப்போவது யார்? விறுவிறுப்பான கட்டத்தில் ஆட்டம்..! தீபக் சாஹர் வெற்றி பெற வைப்பாரா?
IND vs SA 3rd ODI LIVE Updates: தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தொடர்பான உடனுக்குடன் தகவல்கள்
தென்னாப்பிரிக்க அணி நிர்ணயித்த 288 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் இந்திய அணியில் சிறப்பாக ஆடிய விராட்கோலி 65 ரன்கள் எடுத்த நிலையில், மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணி சற்றுமுன்வரை 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவும், ஸ்ரேயாஸ் அய்யர் ஆடி வருகின்றனர்.
இந்திய கேப்டன் கே.எல். ராகுல் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ள நிலையில், 2வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்துள்ள ஷிகர் தவானும், விராட்கோலியும் பொறுமையாக ஆடி வருகின்றனர். இவர்களது ஆட்டத்தால் இந்திய அணி 17 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
288 ரன்கள் இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் 9 ரன்னில் லுங்கி நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்களை எடுத்துள்ளது. இதனால், இந்திய அணிக்கு 288 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிராக நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த டி காக்கும் - வான்டெர் டு சென்னும் அபாரமாக ஆடிய நிலையில், டி காக் 124 ரன்களுக்கும், வான்டெர் டு சென் 52 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால், கடைசி 10 ஓவர்களில் தென்னாப்பிரிக்காவை இந்திய அணி கட்டுப்படுத்துமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை போலவே தொடக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா இழந்தாலும் நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த டி காக் - வான்டெர் டு சென் ஜோடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்கா 200 ரன்களை கடக்க உதவிபுரிந்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்த நிலையில், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் டிகாக்கும் - வான்டெர் டு சென்னும் நிதானமாக ஆடி வருகின்றனர். இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் டி காக் அரைசதம் அடித்தார். ஸ்கோர் விவரம்: 93-3 (18.3 Ov)
தென்னாப்பிரிக்க அணி மூன்றாவது விக்கெட்டை இழந்தது. மார்க்ராம் விக்கெட்டை சாஹர் எடுத்தார்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக முதலில் பந்துவீசி வரும் இந்திய அணி வீரர்கள் அபாரமாக பந்துவீசி வருகின்றனர். கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய மலான் 1 ரன்னிலும், கேப்டன் தெம்பா பவுமா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இந்திய கேப்டனாக கே.எல்.ராகுல் இந்தத் தொடரில் 3 போட்டிகளில் பதவி வகித்துள்ளார். ஒரு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. ஆகவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்று கேப்டனாக முதல் வெற்றியை இவர் பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கேப்டவுன் மைதானத்தில் இந்திய அணி 2011 மற்றும் 2018ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. 2011ஆம் ஆண்டு 2 விக்கெட் வித்தியாசத்திலும், 2018ஆம் ஆண்டு 124 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
கேப்டவுன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா இதுவரை 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. அவற்றில் 31 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
ஒருநாள் தொடர்களில் அதிக முறை ஒயிட்வாஷ் செய்த அணிகள் :
அணிகள் | தொடர்கள் |
பாகிஸ்தான் | 20 |
தென்னாப்பிரிக்கா | 19 |
நியூசிலாந்து | 16 |
ஆஸ்திரேலியா | 16 |
வெஸ்ட் இண்டீஸ் | 16 |
இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தால் வரலாறுதான்..! தட்டித்தூக்குமா தென்னாப்பிரிக்கா?
தென்னாப்பிரிக்கா அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முழு விவரம்:
இந்திய அணியின் முழு விவரம்:
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ், தீபக் சாஹர் மற்றும் பிரஷீத் கிருஷ்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரவிச்சந்திரன் அஷ்வின், வெங்கடேஷ் ஐயர், புவனேஸ்வர் குமார்,ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
Background
தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கேப்டவுனில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் தோல்வி அடையும். ஆகவே இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -