இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று (டிசம்பர் 12) நடைபெறுகிறது. இந்த போட்டியானது க்கெபர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்கா ஸ்டேடியத்தில் இரவு 8.30 மணிக்கு இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றாலே தொடரை கைப்பற்ற முடியும். இத்தகைய சூழ்நிலையில் இரு அணிகளும் இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறுவதற்கு தங்களால் இயன்ற முயற்சியில் ஈடுபடும். 


இந்த தொடர் தென்னாப்பிரிக்காவில் நடந்தாலும், இந்திய அணியே கடந்த கால புள்ளிவிவரங்களின்படி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏனென்றால், கடந்த 8 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்க அணியால் டி20 தொடரில் ஒருமுறை கூட இந்திய அணியை வீழ்த்த முடியவில்லை. கடைசியாக இரு அணிகளும் இணைந்து தென்னாப்பிரிக்கா மண்ணில் நான்கு டி20 தொடர்களில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா இரண்டில் வென்றுள்ள நிலையில், இரண்டு தொடர்கள் டிராவில் முடிந்தது. தென்னாப்பிரிக்கா கடைசியாக 2015-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் வெற்றி பெற்றது. அப்போது கூட இந்திய மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.


டி20 தொடரில் இந்தியாவின் ஆதிக்கம்:


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இதுவரை 8 டி20 தொடர்கள் நடந்துள்ளன. இதில் 8 தொடர்களில் 2 தொடர்கள் சமன் ஆன நிலையில், 4 தொடர்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. அதாவது தென்னாப்பிரிக்கா அணி இதுவரை இரண்டு தொடர்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. 


மேலும், தென்னாப்பிரிக்காவில் நடந்த 4 டி20 தொடரில் இந்திய அணி 3 முறை வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை அவர்களது சொந்த மைதானத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே தொடரில் தோற்கடிக்க முடிந்தது.


ஒட்டுமொத்த சாதனை:



  • 2006ம் ஆண்டு: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரே ஒரு போட்டி கொண்ட டி20 தொடரை இந்திய அணி வென்றது.

  • 2011ம் ஆண்டு: தென்னாப்பிரிக்காவில் மீண்டும் ஒரு போட்டி டி20 தொடர் நடந்தது, இதையும் இந்தியா வென்றது.

  • 2012ம் ஆண்டு: இந்த ஆண்டும் ஒரு போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த முறை தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

  • 2015ம் ஆண்டு: இந்தியாவில் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென்னாப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை க்ளீன் ஸ்வீப் செய்தது.

  • 2018ம் ஆண்டு: தென்னாப்பிரிக்காவில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

  • 2019ம் ஆண்டு: இந்தியாவில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

  • 2022ம் ஆண்டு: இந்தியாவில் இந்த 5 போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

  •  2022ம் ஆண்டு: இந்தியாவில் கடைசியாக விளையாடிய இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. 


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 


இந்திய அணி: 


யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிதுராஜ் கெய்க்வாட்/சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, முகேஷ் குமார், குல்தீப் யாதவ்/ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், முகமது சிராஜ்.




தென்னாப்பிரிக்கா அணி:

 

ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ பிரெட்ஸ்கே, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், டோனோவன் ஃபெரியேரா, மார்கோ யான்சின்/ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, கேசவ் மஹாராஜ், ஜெரால்ட் கோட்ஸி, தப்ரேஸ் பெர்கர், டாப்ரேஸ் பெர்கர்.