தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரில் முதல் போட்டி வரும் 6ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அணிக்கு துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்திய அணி விவரம்:


 





அக்டோபர் 6- முதல் ஒருநாள் போட்டி


அக்டோபர் 9- இரண்டாவது ஒருநாள் போட்டி


அக்டோபர் 11- மூன்றாவது ஒருநாள் போட்டி


இந்த ஒருநாள் தொடருக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி 2 பயிற்சி போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதன்பின்னர் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. 


டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து ஏற்கெனவே காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார். காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து விலகிய தீபக் ஹூடாவின் உடற்தகுதி குறித்து சரியாக தெரியவில்லை. அவரும் முழு உடற்தகுதி பெறவில்லை என்றால் இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் தொடர்பான முழு விவரம் தற்போது வரை வெளியாகவில்லை. அத்துடன் டி20 தொடருக்கான அணியுடன் முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் செல்ல உள்ளதாக தகவல் பரவி வருகிறது. எனினும் டி20 உலகக் கோப்பை அணி தொடர்பாக பிசிசிஐயிடம் இருந்து எந்தவித ஆதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.