இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாடின் அபார சதங்களால், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களை குவித்துள்ளது.
கோலி, கெய்க்வாட் அபாரம் - 358 ரன்கள் குவித்த இந்தியா
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஷவால் மற்றும் ரோஹித் ஷர்மா அதிரடி காட்டத் தொடங்கினர். ஆனால், எதிர்பாராத விதமாக ரோஹித் ஷர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து, விராட் கோலி களமிறங்கினார். இதைத் தொடர்ந்து, மறுமுறையில் 22 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஷ்வால் ஆட்டமிழந்தார். இதையடுத்து, கோலியுடன் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தென்னாப்பிரிகாவின் பந்துவீச்சை சிறதடித்தது.
இருவரும் அபாரமாக ஆடிய நிலையில், கெய்க்வாட் முதலில் சதத்தை பூர்த்தி செய்த நிலையில், அவர் 83 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, கோலியுடன் கே.எல் ராகுல் ஜோடி சேர்ந்தார். இருவரும் அசத்தலாக ரன்களை சேர்த்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் தனது 53-வது சதத்தை பூர்த்தி செய்த கோலி 102 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர் ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேற, ஜடேஜா களத்திற்கு வந்தார். அவரும், கே.எல். ராகுலும் சிறப்பாக ஆடி, இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களை குவித்தது. ராகுல் 66 ரன்களுடனும், ஜடேஜா 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனால், தென்னாப்பிரிக்க அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா தரப்பில், மார்கோ ஜேன்சன் 2 விக்கெட்டுகளையும், பர்கர் மற்றும் இங்கிடி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.