IND vs SA 2nd ODI: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று சத்தீஸ்கரில் நடக்கிறது. ராய்ப்பூரில் நடக்கும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வெல்லும், தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால் 1-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் போட்டியில் நீடிக்கும்.
இந்தியா முதலில் பேட்டிங்:
இந்த பரபரப்பான சூழலில் இன்று தொடங்கிய இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்றது. தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணி தொடர்ச்சியாக 20வது முறையாக ஒருநாள் போட்டிகளில் டாஸ் தோற்றுள்ளது.
முதல் போட்டியில் சேசிங்கைத் தேர்வு செய்து தோல்வி அடைந்தாலும், இந்த போட்டியிலும் மீண்டும் சேசிங்கையே தென்னாப்பிரிக்க அணி தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு பக்கபலமாக அந்த அணியின் கேப்டன் பவுமா அணிக்கு திரும்பியுள்ளார்.
பலமான பேட்டிங்:
கடந்த போட்டியில் களமிறங்கிய அதே இந்திய அணியே இந்த போட்டியிலும் களமிறங்கியுள்ளது. இந்திய அணியில் பேட்டிங் பலமாக ரோகித் சர்மா, விராட் கோலி. கே.எல்.ராகுல், ஜடேஜா உள்ளனர். இளம் வீரர் ஜெய்ஸ்வால் தன்னுடைய அதிரடியை காட்ட வேண்டிய அவசியத்தில் உள்ளனர். கடந்த போட்டியில் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்ட ருதுராஜ் இந்த போட்டியில் ஜொலிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
வாஷிங்டன் சுந்தர் சுழல் மற்றும் பேட்டிங்கில் அசத்த வேண்டியது அவசியம் ஆகும். கடந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருந்த நிலையில், அதே பந்துவீச்சு பட்டாளத்துடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு பக்கபலமாக கேப்டன் பவுமாவுடன் இணைந்து வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி, சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் களமிறங்கியுள்ளனர்.
தென்னாப்பிரிக்க அணிக்கு பேட்டிங் பட்டாளத்தில் டி காக், மார்க்ரம், கேப்டன் பவுமா, ப்ரீட்ஸ்கே, டோனி, ப்ரெவிஸ், யான்சென், கார்பின் போஸ்ச் வரை உள்ளனர்.
இந்திய அணியில் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், ஹர்ஷித் ராணா வேகத்தில் கலக்க காத்துள்ளனர். கடந்த போட்டி போல இல்லாமல் ரன்களை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். குல்தீப் யாதவ் சுழலில் அசத்த வேண்டியது அவசியம். ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆல்ரவுண்டர்களாக உள்ளனர்.
அணி விவரம்:
இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர், கே.எல்.ராகுல். ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா
தென்னாப்பிரிக்கா: டி காக், மார்க்ரம், பவுமா, ப்ரீட்ஸ்கே, டோனி, ப்ரெவிஸ், யான்சென், கார்பின் போஸ்ச், கேசவ் மகாராஜ், பர்கர் நிகிடி