தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

Continues below advertisement

2வது ஒருநாள் போட்டி:

இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூரில் இந்த 2வது போட்டி நடக்கிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதேசமயம், இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. 

ரோ-கோ பேட்டிங் பலம்:

இந்திய அணியைப் பொறுத்தமட்டில் பேட்டிங் பலமாக உள்ளது. முதல் போட்டியில் ஜொலித்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்த போட்டியிலும் அசத்துவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். அதேசமயம், முதல் போட்டியில் சொதப்பிய ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். முதல் போட்டியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறிய ருதுராஜ், வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்தால் அதை சரியாக பயன்படுத்த வேண்டியது அவசியம்.

Continues below advertisement

கேப்டன் கே.எல்.ராகுல் இந்த போட்டியிலும் மிடில் ஆர்டரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர். ஆல்ரவுண்டர் ஜடேஜா முதல் போட்டியில் போலவே தனது பங்களிப்பை அளிப்பார் என்று கருதப்படுகிறது. 

அதிரடி காட்டும் தெ.ஆப்பிரிக்கா:

தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங்கும் பலமாகவே உள்ளது. கடந்த போட்டியில் ஆடாத தெம்பா பவுமா இந்த போட்டியில் ஆடுவார் என்று கருதப்படுகிறது. முதல் போட்டியில் சொதப்பிய மார்க்ரம், ரிக்கெல்டன், டி காக் அதிரடிக்கு திரும்ப வேண்டியது அந்த அணிக்கு அவசியம் ஆகும். 

ப்ரீட்ஸ்கே அந்த அணிக்கு பலமாக உள்ளார். மிடில் ஆர்டரில் ப்ரெவிஸ், டோனி பக்கபலமாக உள்ளனர். மார்கோ யான்சென் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளார். 9வது விக்கெட் வரை பேட்டிங் வைத்திருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய பலமாகும்.

பலவீன பந்துவீச்சு:

இந்திய அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு பலவீனமாக உள்ளது. கடந்த போட்டியில் எளிதாக பெற வேண்டிய வெற்றியை போராடி பெற்றதற்கு இந்திய அணியின் பந்துவீச்சே காரணமாக அமைந்தது. அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா இன்னும் பந்துவீச்சில் அழுத்தம் தர வேண்டியது அவசியம் ஆகும். ஹர்ஷித் ராணா கடந்த போட்டியில் போல சிறப்பாக வீசி விக்கெட் வீழ்த்த வேண்டியது அவசியம் ஆகும்.

சுழலில் குல்தீப் யாதவ் மிகப்பெரிய பலமாக உள்ளார். கடந்த போட்டியில் ஆடிய அதே இந்திய அணி இந்த போட்டியில் களமிறங்குமா? அல்லது அணியில் மாற்றம் இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கும் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது. யான்சென், பர்கர், கார்பின் போஸ்ச், பார்ட்மென் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ரன்களை கட்டுப்படுத்த தவறிவிட்டனர். கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய சுப்ராயன் இந்த போட்டியில் ஆடுவது சந்தேகமே ஆகும்.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றவே இந்திய அணி ஆர்வம் காட்டும். இந்த போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நேரலையில் பார்க்கலாம்.