இந்தியா - தென்னாப்பிரிக்கா:


இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில், டி 20 மற்றும் ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாடி முடித்துள்ளது. இதனிடையே, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் விளையாடி வருகிறது.


இதில் இந்திய அணி  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், இரண்டாம் நாள் விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67.4 ஓவர்கள் முடிவில் 245 ரன்கள் எடுத்தது. தற்போது தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.


அதிகபட்சமாக இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் 137 பந்துகளில் 14 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 101 ரன்கள் எடுத்தார். முன்னதாக, முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.


ரஹானே இருந்திருந்தால்:



இந்நிலையில், அஜிங்க்யா ரஹானே இந்த போட்டியில் இருந்திருந்தால் இந்திய அணியின் ஸ்கோர் வேறு மாதிரி இருந்திருக்கும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் பேசுகையில், ”கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஜோஹன்ஸ்பர்க் டெஸ்ட் போட்டியின் பிட்ச் பற்றி இப்போட்டியில் அனைவரும் பேசுகின்றனர். அப்போட்டியில் நானும் அங்கிருந்தேன். ஆம் அது விளையாடுவதற்கு எளிதான பிட்சாக இல்லை. ஆனால் அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் தேர்வு செய்யப்படாத ரஹானே அந்த போட்டியில் வாய்ப்பு பெற்றார். அந்த வாய்ப்பில் அவர் முதலிரண்டு போட்டியில் இந்தியா தம்மை தவற விட்டதை அணிக்கு காண்பித்தார். 


ஏனெனில் முதலிரண்டு போட்டிகளில் இந்தியா பெரிய வித்தியாசத்தில் தோற்கவில்லை. அந்த வகையில் வெளிநாடுகளில் எப்போதுமே நன்றாக செயல்படும் ரஹானே இன்றைய நாளில் இருந்திருந்தால் இந்தியாவின் கதை வித்தியாசமாக இருந்திருக்கலாம்” என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் கவாஸ்கர்.


மேலும் படிக்க: IND vs SA 1st Test: தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி... அசத்திய ககிசோ ரபாடா... 245 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா..!


மேலும் படிக்க: Watch Video: ஆதரவு தெரிவிக்க சென்ற ராகுல்காந்தி - புரட்டி எடுத்த பஞ்ரங் புனியா: ஹரியானாவில் சுவாரஸ்யம்