ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டே இருந்தது. புவனேஸ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


மற்ற பாகிஸ்தான் வீரர்களை விட நீண்ட நேரம் கிரீஸில் இருந்த ஒரு வீரர் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான். 30 வயதான ரிஸ்வான் 43 (42) ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி 147 ரன்களை குவிக்க உதவினார்.


இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி(35), ஜடேஜா(35) மற்றும் ஹர்திக் பாண்ட்யா(33*) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்காரணமாக இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. 


இந்திய அணி பேட்டிங் செய்தபோது கீப்பராக நின்ற முகமது ரிஸ்வான் பல சந்தர்ப்பங்களில் ஸ்லோவாக இருந்தார். தனக்கு வந்த பந்துகளை கேட்சி பிடிக்காமல் வீட்டு கூடுதல் ரன்கள் கொடுத்தார். இது இந்திய அணிக்கு சாதகமாக இருந்தது.


மேலும், இந்திய பேட்ஸ்மேன்களை எப்படியாவது அவுட் செய்ய வேண்டும் என்ற முயற்சியில், அவர்கள் பின்னாடி விடும் ஒவ்வொரு பந்திற்கும் அவுட் என அப்பீல் செய்தார். ஒரு முறை, இரு முறை அல்ல, பல முறை இதேபோல் ரிஸ்வான் செய்தார். இதனால் ஒரு சில ரசிகர்களுக்கு கோபத்தையும் எரிச்சலையும் உண்டாக்கியது. 


தொடர்ந்து பலர், ரிஸ்வானை பாகிஸ்தானின் முன்னாள் கீப்பர் கம்ரான் அக்மலுடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் பலர் கடுமையாக விமர்சனமும் செய்து வருகின்றனர். அப்படியான ரசிகர்களின் கேலியான மீம்ஸ் படைப்பாற்றலை கீழே காணலாம். 


முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா போஸ்ட் : 






















மேலும் படிக்க : IND vs PAK, Asia Cup Win: ஒளியே வழியாக மலையே படியாக..இனிஒரு விதி செய்வோம்.. இந்திய வெற்றியை கொண்டாடும் மக்கள்


மேலும் படிக்க : IND vs PAK: தர்மம் தோற்காதே ஆளும் காவலனே... ஹர்திக் பாண்ட்யாவிற்கு தலை வணங்கிய கார்த்திக்.. வைரல் படம்..