இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை எங்கு காணலாம் எதில் காணலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 


இந்தியா vs பாகிஸ்தான்: 


சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டி துபாயில் நடந்து வருகிறது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா, அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யவும், 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பதிலடிக்கும் போட்டியாக இந்த போட்டி உள்ளது.


முதல் போட்டியில் வங்கதேசத்தை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இதற்கு நேர்மாறாக, முகமது ரிஸ்வானின் தலைமையிலான பாகிஸ்தான், தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, இதனால் இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 


இதையும் படிங்க:IND vs PAK: காயத்தால் கஷ்டம்! இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் முகமது ஷமி மோசமான சாதனை!


இலவசமாக பார்க்கலாம்: 


இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD 2 சேனல்களில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் போட்டி வர்ணனைகளுடன் நீங்கள் நேரடியாகப் பார்க்கலாம்.


இந்த  போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஜியோ ஹாட்ஸ்டாரிலும் காணலாம். சமீபத்தில் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா இரு செயலிகளும் இணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் செயலியாக உள்ளது. 


இந்தி, ஆங்கிலம், போஜ்புரி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹரியான்வி உள்ளிட்ட பல மொழிகளில் ஜியோ ஸ்டாரில் பல மொழிகளில் வர்ணனையை காணலாம். 


ஜியோ ஸ்டார் செயலியில் கட்டணம் அறிவிக்கப்பட்ட பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடரை எப்படி காண்பது என்கிற சந்தேகம்  பல பேருக்கும் இருந்தது. கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதையும் ஜியோ ஸ்டார் செயலியில் இலவசமாக காணலாம் என்ற அறிவிப்பை அந்நிறுவனம் அடித்தது. 


இதையும் படிங்க: IND vs PAK: கதறவிடும் இந்தியா.. காலை வாரிய பாபர் அசாம்.. கேப்டன் இன்னிங்ஸ் ஆடுவாரா முகமது ரிஸ்வான்?.


பிளேயிங்XI


இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில் , விராட் கோலி , ஷ்ரேயாஸ் ஐயர் , அக்சர் படேல் , கே.எல். ராகுல் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா , ரவீந்திர ஜடேஜா , ஹர்ஷித் ராணா , முகமது ஷமி, குல்தீப் யாதவ


பாகிஸ்தான்: இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் , சவுத் ஷகீல் , முகமது ரிஸ்வான் (கேப்டன் & wk), சல்மான் ஆகா, தயப் தாஹிர் , குஷ்தில் ஷா , ஷாஹீன் அப்ரிடி , நசீம் ஷா , ஹாரிஸ் ரவூப் மற்றும் அப்ரார் அகமது