Champions Trophy 2025 Points Table: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தினால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும்.

 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025: IND Vs PAK

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, லீக் சுற்றின் முடிவில் இரண்டு பிரிவுகளிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில், பி பிரிவில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், இன்று மோத உள்ளன. களத்தில் பரம எதிரிகளாக கருதப்படும் இந்த இரு அணிகளும் மோதும் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் கண்ட தோல்விக்கு, இந்திய அணி பாகிஸ்தானை பழிவாங்குமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

புள்ளிப்பட்டியல் நிலவரம்:

இந்நிலையில் இரு பிரிவுகளிலும் நடந்து முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த சூழலில் உள்ளன என்பதை இங்கே அறியலாம்.

குரூப்-ஏ

அணிகள் போட்டி வெற்றி தோல்வி ரன்ரேட் புள்ளிகள்
நியூசிலாந்து 1 1 0 1.20 2
இந்தியா  1 1 0 0.408 2
வங்கதேசம் 1 0 1 -0.408 0
பாகிஸ்தான் 1 0 1 -1.20 0

குரூப் - பி

அணிகள் போட்டி வெற்றி தோல்வி ரன்ரேட் புள்ளிகள்
தென்னாப்ரிக்கா 1 1 0 2.140 2
ஆஸ்திரேலியா 1 1 0 0.475 2
இங்கிலாந்து 1 0 1 -0.475 0
ஆஃப்கானிஸ்தான் 1 0 1 -2.140 0

இந்திய அணியின் நிலை என்ன?

முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்க உள்ளது. அப்படி வெற்றி பெற்றார் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுவதோடு, அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை தோல்வியுற்றால், நியூசிலாந்து அணி உடனான கடைசி லிக் போட்டியில், கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும்.

பாகிஸ்தான் அணியின் நிலை என்ன?

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியிலேயே தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி, கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழல் உள்ளது. ஒருவேளை தோல்வியுற்றால், சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியிலிருந்து பாகிஸ்தான் வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

IND Vs PAK - எங்கு? எப்போது? நேரலை எப்படி?

துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் இலவசமாக நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும். தொலைக்காட்சிகளில்  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஸ்போர்ட்ஸ்18 தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.