ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணி மோதி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தவுடன் ரோகித்சர்மா சிக்ஸர் மழை பொழிவாரா..? விராட்கோலி மிரட்டுவாரா? என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.


மழையும், விக்கெட்டும்:


ஆனால், மந்தமான வானிலையுடன் தொடங்கிய இந்த ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு மந்தமாக தற்போது வரை உள்ளது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழையால் தடைபட்ட ஆட்டம் மீண்டும் சிறிது நேரத்திற்கு முன்பு மீண்டும் தொடங்கியது. மழைக்கு பின் ஆட்டம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்த்தது போலவே சூடுபிடித்தது. ஆனால், அந்த சூடு இந்திய ரசிகர்களை எரிச்சலின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது என்றே கூற வேண்டும்.




ஷாகின் அப்ரீடியை தடுமாறிக் கொண்டே இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டது தெரியவந்தது. அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட ஷாகின் அப்ரீடி புதிய பந்தில் விக்கெட் எடுப்பதில் தான் வல்லவர் என்பதற்கு நிரூபிக்கும் விதமாக கேப்டன் ரோகித்சர்மா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட்கோலியை போல்டாக்கினார்.


ரோகித்சர்மா 22 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களுடனும், விராட்கோலி 7 பந்தில் 1 பவுண்டரியுடன் 4 ரன்னுடனும் களத்தில் திரும்பியது ரசிகர்களை மிகுந்த சோகத்திற்கு ஆளாக்கியது. மறுமுனையில் ஒரு வித பதற்றத்துடனே சுப்மன்கில் பேட்டிங் செய்ய, அவருக்கு துணையாக நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ஸ்ரேயாஸ் இந்திய அணியை மீட்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவர் ஏமாற்றத்தையே பதிலாக தந்துவிட்டு சென்றார்.




களமிறங்கியதும் சட்டென்று 2 பவுண்டரிகளை விளாசிய ஸ்ரேயாஸ் ஹாரிஸ் ராஃப் வீசிய ஷார்ட் பிட்ச் பந்துக்கு இரையானார். அவருக்கு பிறகு சுப்மன்கில் – இஷான்கிஷான் ஜோடி சேர்ந்தது. ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த அனுபவம் கொண்ட இந்த இரண்டு இளைஞர்களும் பாகிஸ்தான் வேகத்தை தடுத்தாலே போதும் என்று மட்டையை சுழற்றியது மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.


இந்திய ரசிகர்கள் சோகம்


அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களுக்கு தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய அணியை பார்த்து மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் வேதனையில் மூழ்கியிருந்தனர் என்பதே உண்மை. இந்த சூழலில், ஏற்கனவே வேதனையில் இருக்கும் ரசிகர்களை மேலும் சோகத்தில் மூழ்கடிக்கும் விதமாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.


இதனால், ஆட்டம் நிறுத்தப்பட்டு தார்ப்பாய் போடப்பட்டு மைதானம் மூடப்பட்டுள்ளது. மழை குறுக்கிட்டு போட்டியை காண முடியவில்லையே என்று பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் ஆதங்கத்துடன் உள்ளனர். தற்போது மீணடும் மழை குறுக்கிட்டு வருவதால் போட்டி மீண்டும் எப்போது தொடங்கும்? தொடங்கினால் இந்திய அணி மீண்டு வருமா..? சுப்மன்கில் – இஷான்கிஷான் ஜோடி இந்த கடினமான சூழலை சமாளிப்பார்களா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


மேலும் படிக்க: Virat Kohli Watch Video: வியந்துபோன பாகிஸ்தான் வீரர்கள்.. அன்பிலும் சிக்ஸர் அடிக்கும் விராட் கோலி.. வைரலாகும் வீடியோ!


மேலும் படிக்க: Watch Video: ஷாஹீன் அப்ரிடியிடம் அடுத்தடுத்து வீழ்ந்த விராட், ரோஹித்.. ஆரம்பமே தடுமாறும் இந்திய அணி..!