நெஆசிய கோப்பைத் தொடரில் இலங்கையின் பல்லேகேலேவில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் டாஸ் வென்றபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.


இஷான்கிஷான் அவுட்:


ரோகித், விராட், சுப்மன், ஸ்ரேயாஸ் என பெரும் பேட்டிங் பட்டாளத்தின் மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்த நிலையில், அனைவரும் ஏமாற்றினார். ஆனால், தனி ஆளாக நெருக்கடியான நேரத்தில் களமிறங்கிய இளம் வீரர் இஷான்கிஷான் அபாரமாக ஆடி அரைசதம் விளாசினார். அரைசதம் விளாசிய அவர் சதம் விளாசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், 82 ரன்களுக்கு அவுட்டானார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


மழை அபாயம் எச்சரிக்கை இருந்தாலும் கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்ததால் இந்திய அணி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் என்று பலரும் ஆவலுடன் இருந்தனர். ஆனால், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஷாகின் இந்திய அணிக்கு தலைவலி தரும் விதமாக கேப்டன் ரோகித்சர்மா, விராட்கோலியை போல்டாக்கினார்.


மிரட்டிய இளைஞர்:


ஸ்ரேயாஸ் அய்யரும் 14 ரன்களில் அவுட்டாக, தொடக்கம் முதலே தடுமாறிய தொடக்க வீரர் சுப்மன்கில் 10 ரன்களுக்கு அவுட்டானர். அப்போது 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இஷான் கிஷான் – ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து மிகவும் நிதானமாக ஆடினர்.


குறிப்பாக, இளம் வீரர் இஷான்கிஷான் பதற்றமே இல்லாமல் நிதானமாகவும் அதேசமயம் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் அனுப்பினார். இதனால், தடுமாறிக் கொண்டிருந்த இந்தியாவிற்கு சிறந்த பார்ட்னர்ஷிப் அமைந்தது. தடுமாறிக் கொண்டிருந்த இந்திய அணி 150 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய இஷான்கிஷான் அரைசதம் விளாசினார்.


பாகிஸ்தானுக்றகு பயம்:


ஜாம்பவான்களான ரோகித், விராட் கோலி பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாத சூழலில் இஷான்கிஷான் அவர்களுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்தார். சில பந்துகளை அவருக்கே உரித்தான ஸ்டைலில் சிக்ஸருக்கு அனுப்பினார். இஷான்கிஷான் – ஹர்திக் பாண்ட்யா ஜோடியை பிரிக்க பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முயற்சி மேற்கொண்டார்.


பாகிஸ்தான் சுழலை மிகவும் நேர்த்தியாக கையாண்ட இஷான்கிஷான் தடுமாற்றமின்றி ரன்களை சேர்த்தார். அரைசதத்திற்கு பிறகு அதிரடிக்கு மாறிய இஷான்கிஷான் ரன் சேகரிப்பில் துரிதம் காட்டினார், ஹாரிஸ் ராஃப் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்தபோது பந்து பேட்டில் சரியாக படாமல் கேப்டன் பாபர் அசாமிடம் கேட்ச்சாக மாறியது.


மிக நெருக்கடியான நேரத்தில் சிறப்பான இன்னிங்சை ஆடிய இஷான் கிஷான் 81 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 82 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.


மேலும் படிக்க: IND vs PAK: ’இதை என்றுமே பாகிஸ்தான் செய்யாது, ஆனா! இந்தியா செஞ்சிருக்கு’.. அணி தேர்வை விமர்சித்த கம்பீர்!


மேலும் படிக்க:  மேலும் படிக்க: IND Vs Pak: நெருப்பாய் களம் காணும் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் சாதித்தது என்ன?