கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த மாபெரும் போட்டி தற்போது மழைக்கு நடுவே நடந்து கொண்டிருக்கிறது. 2023 ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பகிஸ்தான் அணிகளுக்கு இடையே  சிறப்பான ஆட்டம் நடைபெற்று வருகிறது.


பல்லேகல சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். 


முன்னதாக, இந்த போட்டியில் விளையாடும் 11 அணியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி உட்கார வைக்கப்பட்டார். இது முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல முன்னாள் இந்திய வீரர்கள் இது சரியான முடிவு என்று கருத்து தெரிவித்து வருகின்றன. 


இந்தநிலையில், முகமது ஷமி உட்கார வைக்கப்பட்டது ஏன் என்று  முன்னாள் இந்திய தொடக்க வீரர் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ முகமது ஷமி ஒரு சாம்பியன் பந்துவீச்சாளர். அவருக்கு இருக்கும் அனுபவம், அவர் போட்டியில் எவ்வளவு முக்கியமானவர் என்பவர் என்பதை நிரூபிக்க முடியும். இந்திய அணி ஒரு பெரிய போட்டியில் விளையாட வேண்டும் என்றால், பெரும்பாலும் பேட்டிங்கையே வலுப்படுத்தும் நோக்கில் செல்கிறது. 






இதன் காரணமாகவே, இந்திய அணி முகமது ஷமியை நீக்கியதா என்று தெரியவில்லை. பாகிஸ்தான் அணி எந்த ஒரு முக்கியமான பந்துவீச்சாளர்களை உட்கார வைக்கவில்லை. பாகிஸ்தான் அணி ஒருபோதும் இதை செய்யாது. ஆனால், இந்திய அணியின் சிந்தனை வித்தியாசமானதாக இருக்கிறது. இவ்வளவு பெரிய போட்டியில் நீங்கள் பந்துவீச்சை மேம்படுத்த வேண்டியிருக்கும்போது, இந்திய அணி பேட்டிங்கை பலப்படுத்துகிறார்கள். சில சமயங்களில் எதிரணி பேட்ஸ்மேன்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும். ” என்றார். 


விளையாடும் இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்


விளையாடும் பாகிஸ்தான் அணி: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்