ஆஸ்திரேலியாவில் டி20 உலககோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் தற்போது பயிற்சி போட்டியில் ஆடி வருகின்றன. கடந்த பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா இன்று நியூசிலாந்து அணியுடன் மோத இருந்தது.


பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த இந்த போட்டி, மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. கப்பா மைதானத்தில் காலை முதலே மழை பெய்து வந்தது. இந்த நிலையில், போட்டி தொடங்கும் நேரமாகியும் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் டாஸ் கூட போடப்படாமல் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






மழை தொடர்ந்து பெய்து வந்த சூழலில், 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்த முயற்சி செய்தனர். ஆனால், மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. மழை பெய்து கொண்டிருந்ததாலும், மைதானத்தில் ஈரப்பதம் அதிகளவில் இருந்த காரணத்தாலும் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகள் தங்களது போட்டிகள் தொடங்கும் முன்னர் தலா 2 பயிற்சி போட்டிகளில் ஆடவிருந்தனர். இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை மோத உள்ளது.


 






கடந்த டி20 உலக கோப்பையிலும் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதியது. நடப்பு உலககோப்பை டி20 தொடரிலும் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோத உள்ளது. நியூசிலாந்து அணி தனது முதல் பயிற்சி போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதியது. கடந்த போட்டியில் களமிறங்காத ஜிம்மி நீஷம், கான்வே இந்த போட்டியில் களமிறங்க இருந்த நிலையில் இந்த பயிற்சி போட்டி ரத்தாகியுள்ளது.


மேலும் படிக்க : IND vs PAK: நீங்க வரலை என்றால் நாங்களும் வரமாட்டோம்.. இந்தியாவை எச்சரிக்கிறதா பாகிஸ்தான்? காரணம் என்ன?


மேலும் படிக்க : 1st Wicket Partnership T20 WC: முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் அடித்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்: லிஸ்ட் இதோ