Highest First Wicket Partnership in T20 World Cup: டி20 உலககோப்பையில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் விளாசிய ஓப்பனிங் பார்ட்னர்சிப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
ஐசிசி டி20 உலககோப்பை போட்டித் தொடர் இந்த மாதத்தின் 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தகுதிச் சுற்று போட்டிகளும் அதன் பின்னர் லீக் போட்டிகளும் தொடர்ந்து நடைபெறவுள்ளன. தகுதிச் சுற்றில் தகுதி பெரும் நான்கு அணிகள் மற்ற எட்டு அணிகளுடன் இணைந்து சூப்பர் 12 சுற்றில் இருந்து லீக் தொடர் ஆரம்பம் ஆகும்.
2007 முதல் ஐசிசி உலககோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை ஏழு டி20 உலககோப்பை போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது. இதுவரை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் மேற்கு இந்திய அணிகள் இரண்டு முறையும் கோப்பையை வென்றுள்ளன.
டி20 கிரிகெட்டோ ஒரு நாள் போட்டியோ டெஸ்ட் கிரிக்கெட்டோ எந்தவகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் ஒரு அணிக்கு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் எடுக்கப்படும் ரன்கள் மிகவும் முக்கியமனவை. ஒரு அணி தொடர்ந்து நம்பிக்கையாக ஒரு போட்டியை முழுவதும் எதிர்கொள்ள ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் என்பது அத்யாவசியமாக உள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் என்பது சரியாக அமையவில்லை என்றால், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போல் பல போட்டிகள் இருந்துள்ளன.
இவ்வளவு பெரும் பொறுப்பைச் சுமந்து விளையாட்டை துவங்கும் முதல் இரண்டு பேடஸ்மேகளுக்கு உலககோப்பையில் உள்ள பொறுப்பு என்பது மிகவும் கூடுதலான அழுத்தத்தைக் கொண்டது. அப்படி அழுத்தங்கள் நிறைந்த டி20 உலககோப்பை போட்டியில் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் கலக்கி வரலாறு படைத்தவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
1. முகமது ரிஸ்வான் & பாபர் அஸாம் ( 2021)
கடந்த ஆண்டு துபாயில் நடந்த டி20 உலககோப்பை போட்டியில் பாகிஸ்தன் அணி இந்தியாவுக்கு எதிராக நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் விளாசி வெற்றி பெற்றது. மேலும், இந்திய அணியை பாகிஸ்தான் அணி டி20 உலககோப்பையில் வென்றதே கிடையாது என்பது இந்த போட்டியை வென்றதன் மூலம் பாகிஸ்தான் அணி டி20 உலககோப்பையில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரனகள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2.கெயில் & ஸ்மித் (2007)
2007 ஆம் ஆண்டு நடந்த டி20 உலககோப்பை போட்டியில் தெனாப்ரிக்காவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கெயில் மற்றும் ஸ்மித் முதல் விக்கெட்டுக்கு 145 ரன்கள் விளாசியது. குறிப்பாக கெயில் 57 பந்துகளில் 117 ரன்கள் விளாசினார். ஆனால் இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மோசமான பவுலிங்கால் தோல்வியைச் சந்தித்தது.
3.கம்ரன் அக்மல் & சல்மான் பட் (2010)
2010 உலககோப்பையில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில், அணியின் தொடக்க வீரர்கள் கம்ரன் அக்மல் மற்றும் சல்மான் பட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. கே.எல். ராகுல் & ரோகித் ஷர்மா (2021)
கடந்த ஆண்டு நடந்த டி20 உலககோப்பை போட்டியில் இந்திய அணி ஆஃப்கானிஷ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல். ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஜோடி முதல் விகெட்டுக்கு 140 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 47 பந்துகளில் 74 ரன்கள் குவித்த ரோகித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
5. கம்பீர் & சேவாக் (2007)
இந்திய அணியின் ஆதிக்கம் நிறைந்த டி20 உலககோப்பை போட்டித் தொடர் என்றால் அது 2007 ஆண்டு நடந்த டி20 உலககோப்பை போட்டி தான். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் தொடக்க ஜோடி கம்பீர் மற்றும் சேவாக் முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் குவித்தனர். இந்த போட்டியில் தான் யுவராஜ் சிங் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் விளாசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.